சூப்பர் கோச்சை பிடித்த ஆப்கானிஸ்தான் அணி.. இனி எல்லா டீமுக்கும் மிரட்டல் தான்!

காபுல் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல் - ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னரை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

90களில் சிறந்த ஆல் - ரவுண்டராக வலம் வந்தவர் லான்ஸ் குளூஸ்னர். பல ஆல் - ரவுண்டர்களுக்கும் சிறந்த முன்னுதராணமாக விளங்கியவர்.

அவரை தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் நியமித்து அதிரடி காட்டி இருக்கிறது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு.

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி உலகிலேயே மிக விரைவாக முன்னணி அணியாக மாறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் பெரிய அணிகளை வீழ்த்தும் அணியாக மாறும் என விமர்சகர்கள் கணித்து வருகிறார்கள்.

தலைமை பயிற்சியாளர்

தலைமை பயிற்சியாளர்

இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி. உலகக்கோப்பை தொடரின் மோசமான ஆட்டத்துக்கு பின் அதில் இருந்து மீளும் முயற்சியாகவும் இந்த தேர்வு பார்க்கப்பட்டது.

லான்ஸ் குளூஸ்னர் தேர்வு

லான்ஸ் குளூஸ்னர் தேர்வு

50 பேர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில், லான்ஸ் குளூஸ்னரை தேர்வு செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. குளூஸ்னர் சமீபத்தில் நடந்த இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி சர்ச்சை

ஆப்கானிஸ்தான் அணி சர்ச்சை

ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் பெரும் சர்ச்சையில் சிக்கியது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக கேப்டனை மாற்றப்பட்டார். அதனால், அந்த அணி சரியான திட்டம் இல்லாமல் உலகக்கோப்பை தொடரில் சொதப்பலாக ஆடியது.

ரஷித் கான் கேப்டன்

ரஷித் கான் கேப்டன்

உலகக்கோப்பை தொடருக்கு பின் அணியை மாற்றி அமைக்கப்பட்டது. ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய தலைமை பயிற்சியாளராக லான்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி எப்படி?

ஆப்கானிஸ்தான் அணி எப்படி?

ஆப்கானிஸ்தான் அணி முன்பு போல மீண்டும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கலக்கலாக ஆடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த குளூஸ்னர் ஆப்கானிஸ்தான் அணியை பெரிய உயரங்களுக்கு அழைத்துச் செல்வார் என அந்த அணியும் நம்பிக்கையுடன் உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Afghanistan cricket board selected Lance klusener appointed as head coach. The team is expecting to come back from world cup defeat.
Story first published: Friday, September 27, 2019, 19:40 [IST]
Other articles published on Sep 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X