For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பவுண்டரி லைனில் 'கோக்குமாக்கு' வேலை.. சிக்கிய ஆப்கன் வீரர்.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

அபுதாபி: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஆப்கன் ஃபீல்டர் ஒருவர் பவுண்டரி லைனில் நின்று பம்மாத்து காட்ட இப்போது வசமாக சிக்கியிருக்கிறார்.

எதே.. ஜிம்பாப்வே டெஸ்ட் மேட்ச்சா? என்று ஜெர்க் ஆகக் கூடாது. ஏன்.. இந்தியா மட்டும் தான் கிரிக்கெட் விளையாடுமா? சரி மேட்டருக்கு வருவோம்.

இந்த 3 விஷயத்த செஞ்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும்..முடிவெடுப்பாரா கோலி...2வது டி20க்கான கணிப்புகள் இந்த 3 விஷயத்த செஞ்சா மட்டும் தான் ஜெயிக்க முடியும்..முடிவெடுப்பாரா கோலி...2வது டி20க்கான கணிப்புகள்

அபுதாபியில் ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வருகிறது.

 இரட்டை சதம்

இரட்டை சதம்

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கன், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 545 ரன்கள் குவித்தது. ஷாஹிதி 443 பந்துகளில் 200 ரன்கள் குவிக்க, கேப்டன் அஷ்கர் 164 ரன்கள் விளாசினார். (வெளியுலகம் தெரியாம எவ்ளோ அப்ராணியா இருக்கோம் பாருங்க)

 தலைகுனிவு

தலைகுனிவு

பிறகு களமிறங்கிய ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் மட்டும் எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் மோசம்.. 185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் எட்ஜில் உள்ளது. இதில், ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த போது, ஆப்கன் ஃபீல்டர் ஹஷ்மதுல்லா ஷாஹிதி செய்த சம்பவம் அந்த அணிக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

 லைனுக்கு முன்பாக

லைனுக்கு முன்பாக

சம்பவம் என்னன்னா.. நேற்று 3ம் நாள் ஆட்டத்தின் போது, ஜிம்பாப்வே 8 விக்கெட் இழ்ப்பிற்கு 281 ரன்கள் எடுத்திருந்த போது, 79 ரன்களுடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சிக்கந்தர் ரஸாவும், பவுலர் முசாராபனியும் களத்தில் இருந்தனர். அப்போது, ஓவரின் கடைசி பந்தை சிக்கந்தர் கவர் திசையில் அடிக்க, பந்து பவுண்டரி நோக்கி சென்றது. ஆனால், பவுண்டரி எல்லை வரை சென்ற பந்து, கரெக்ட்டாக லைனுக்கு சற்று முன்னதாகவே நின்றுவிட்டது.

 ஏமாற்றிய ஃபீல்டர்

ஏமாற்றிய ஃபீல்டர்

அப்போது அந்த பந்தை துரத்திச் சென்ற ஹஷ்மதுல்லா ஷாஹிதி, அடுத்த ஓவரின் முதல் பந்தை முசாராபனி சந்திக்க வேண்டும் என்பதற்காக, பந்து பவுண்டரியில் பட்டுவிட்டதாக கட்டுவதற்காக, ஒரு காலை பவுண்டரி லைனுக்கு வெளியே வைத்து, மறு காலை பந்துக்கு முன் வைத்து மறைத்து, பின் பந்தை பவுண்டரி என்று கட்டிவிட்டார்.

 கண்டுபிடித்த அம்பயர்கள்

கண்டுபிடித்த அம்பயர்கள்

ஆனால், இவரது பம்மாத்தை கள நடுவர்கள் கண்டுபிடித்துவிட்டனர். உள்நோக்கத்துடன் அவர் பந்தை பவுண்டரிக்கு தட்டிவிடுவது போன்று பீல்டிங் செய்ததாக கூறி, ஆப்கனுக்கு அபராதம் விதிக்கும் விதமாக, ஜிம்பாப்வேக்கு கூடுதல் ரன்களும் கொடுத்து, சிக்கந்தர் மீண்டும் அடுத்த ஓவர் பேட் செய்யவும் அனுமதித்தனர்.

Story first published: Saturday, March 13, 2021, 18:11 [IST]
Other articles published on Mar 13, 2021
English summary
Afghanistan vs Zimbabwe - ஐசிசி விதியை மீறிய ஆப்கன் வீரர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X