For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து தோல்விக்கு பின் ஆப்கன் வீரர்கள் ஓட்டலில் தகராறு… உள்ளே புகுந்த போலீஸ்.. என்ன நடக்குது?

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான தோல்விக்குப்பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் திரும்பியபோது அங்கு மக்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.

உலக கோப்பையில் மான்செஸ்டரில் நடந்த லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இதுவரை 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஆப்கானிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறலாம். அணியின் செயல்பாட்டால் வீரர்களும் கடும் விரக்தியில் இருந்து வருகின்றனர்.

Afghanistan players fighted in restaurant in Manchester

இந்நிலையில் போட்டி முடிந்தபின், மான்செஸ்டரில் நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ஆப்கானிஸ்தான் அணியினர் சென்றுள்ளனர். அப்போது ஹோட்டலில் இருந்த சிலர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிலரை புகைப்படம் எடுக்க முயன்றனர்.

ஒத்த ஆட்டம்..!! ஒட்டுமொத்த பாகிஸ்தானையே பேச வைச்சிடுச்சே...!! அணி நிர்வாகத்தில் வருகிறது மாற்றம்? ஒத்த ஆட்டம்..!! ஒட்டுமொத்த பாகிஸ்தானையே பேச வைச்சிடுச்சே...!! அணி நிர்வாகத்தில் வருகிறது மாற்றம்?

அப்போது, அங்கிருந்தவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக போலீசாருக்கு தகவல் பறந்தது. அங்கு வந்த போலீசார் ஆப்கானிஸ்தான் வீரர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மான்செஸ்டர் நகரில் லிவர்பூல் சாலையில் இருக்கும் அக்பர் ரெஸ்டாரன்டில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும், பொதுமக்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்று, அங்கு சென்றோம்.

அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம இருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். தகராறில் யாருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை, யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, June 19, 2019, 17:52 [IST]
Other articles published on Jun 19, 2019
English summary
Afghanistan players fighted in restaurant in Manchester.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X