For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஆப்கானிஸ்தான் டோணி"யின் அதிரடி... சதம் போட்டு ஜிம்பாப்வேயை தூக்கி அடித்தார்!

ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் அணியின் டோணி என்று செல்லமாக அழைக்கப்படும் முகம்மது ஷாஷாத் அதிரடியாக ஆடி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் போட்டு கலக்கி விட்டார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியைப் பெற்றது.

நம்ம ஊரில் டோணியை செல்லமாக எம்.எஸ். என்று அழைப்பார்கள். அதேபோல ஷஷாத்தையும் எம்.எஸ். என்றுதான் அழைப்பார்கள் அந்த ஊர் ரசிகர்கள். பெயருக்கேற்ப டோணி ஸ்டைலில்தான் ஷஷாத்தும் விளையாடி வருகிறார்.

தற்போது ஷார்ஜாவில் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது. ஏற்கனவே ஜிம்பாப்வேயில் நடந்த ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் வென்று விட்டது. தற்போது ஷார்ஜாவில் டுவென்டி 20 தொடர் நடந்து வருகிறது.

2 போட்டிகளிலும் அட்டகாச வெற்றி

2 போட்டிகளிலும் அட்டகாச வெற்றி

இதில் 2 டுவென்டி 20 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அபாரமாக வென்றது. தொடரையும் கைப்பற்றியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்றிருந்தது. 2வது போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி விட்டார் ஷஷாத்.

118 ரன்கள்

118 ரன்கள்

2வது டுவென்டி 20 போட்டியில் ஷஷாத் அட்டகாசமாக ஆடி 118 ரன்களைக் குவித்தார். மொத்தம் 67 பந்துகளைச் சந்தித்த அவர் 10 பவுண்டரிகளுடன் இந்த சாதனையைச் செய்தார்.

4வது பெரிய ஸ்கோர்

4வது பெரிய ஸ்கோர்

டுவென்டி 20 போட்டி வரலாற்றில் இது நான்காவது பெரிய ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை போட்டியில் சதம் போட்ட முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையும் ஷஷாத்திடமே உள்ளது.

டூபிளஸிஸுக்குப் பக்கத்தில்

டூபிளஸிஸுக்குப் பக்கத்தில்

இன்னும் 2 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் பாப் டூபிளஸிஸ் எடுத்த 119 ரன் சாதனையை முறியடித்து, ஷஷாத் டுவென்டி 20 கிரிக்கெட்டின் 3வது பெரிய ஸ்கோரை எடுத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

பின்ச், மெக்கல்லம் வரிசையில்

பின்ச், மெக்கல்லம் வரிசையில்

இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் 156 ரன்களைக் குவித்துள்ள ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் இருக்கிறார். 2வது இடத்தில் பிரன்டன் மெக்கல்லம் 123 ரன்களுடன் இருக்கிறார்.

டோணியின் ரசிகரும் கூட

டோணியின் ரசிகரும் கூட

டோணி மாதிரி விளையாடுபவர் மட்டுமல்ல, டோணிக்கே இவர் பெரிய ரசிகரும் கூட.. அப்பச் சரி!

Story first published: Monday, January 11, 2016, 15:16 [IST]
Other articles published on Jan 11, 2016
English summary
Afghanistan's Mohammad Shahzad, known as 'MS' like India captain MS Dhoni, smashed the fourth highest score in Twenty20 international history when he made 118 in his side's 81-run rout of Zimbabwe.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X