அந்த ஒரு மணி நேரம்..! அறிமுக டெஸ்டிலேயே உலக சாதனை படைத்த முதல் இளம் கேப்டன்..!!

BAN vs AFG : Afghanistan beat Bangladesh

டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம், அறிமுக போட்டியில், ஒரே டெஸ்டில் 11 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய உலக சாதனையை ரஷித் கான் படைத்தார்.

வங்கதேசம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்களும், வங்கதேசம் 205 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 260 ரன்களுக்குள் சுருண்டது.

எனவே, வங்கதேசத்துக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கு என்ற போதிலும், வங்கதேசம் கடுமையாக முயன்றது. 4வது நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா வரும் தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளராக இந்திய வீரர் நியமனம்..! ரசிகர்கள் ஷாக்..!!

தாமதம்

தாமதம்

5வது நாள் துவக்கத்தில் கனமழை குறுக்கிட்டதால் போட்டி உணவு இடைவேளை வரை போட்டி நடக்கவில்லை. மழை நின்ற பின் வெறும் 13 பந்துகள் தான் வீசப் பட்டன. மீண்டும் மழை வர, போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் வெறும் 18.3 ஓவர்கள் மட்டுமே விளையாட அம்பயர்கள் அறிவுறுத்தினர்.

சாதனை வெற்றி

சாதனை வெற்றி

சுழல் பந்தில மாயாஜாலத்தை கேப்டன் ரஷித் கான் காட்ட, வங்க தேசம் 2வது இன்னிங்சில் 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 224 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது.

ரஷித் உலக சாதனை

ரஷித் உலக சாதனை

போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் மொத்தமாக 11 விக்கெட் மற்றும் ஒரு அரைசதம் எடுத்து மிரட்டினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் கேப்டனாக, அறிமுக போட்டியில், ஒரே டெஸ்டில் 11 விக்கெட் மற்றும் அரைசதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

3வது கேப்டன்

3வது கேப்டன்

இது தவிர, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே டெஸ்டில் 10 விக்கெட் மற்றும் அரைசதம் விளாசிய 3வது கேப்டன் ஆனார் ரஷித். இவருக்கு முன்பாக, முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Afghanistan young captain Rashid khan, creates a new record against Bangladesh.
Story first published: Monday, September 9, 2019, 20:09 [IST]
Other articles published on Sep 9, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X