For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகமது ஷமியின் ஹாட்ரிக்… ஒன்றல்ல… இரண்டல்ல.. 32 ஆண்டுகள் கழித்த சாதனை படைத்த இந்திய பவுலர்

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

சவுதாம்ப்டன்: சேட்டன் சர்மாவுக்கு பின்னர், 32 ஆண்டுகள் கழித்து இந்திய பவுலர் ஒருவர் உலக கோப்பையில் ஹாட்ரிக் படைத்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உலக கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதாம்ப்டன் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி மட்டுமே அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். கேதர் ஜாதவ் 52 ரன் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் வீரர்களின் அபாரமாக பந்துவீச்சால் இந்திய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. 225 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கான், கடைசி ஓவர் வரை இந்திய அணியை திணறடித்தது.

கரை சேர்ந்த இந்தியா

கரை சேர்ந்த இந்தியா

50வது ஓவரில் முகமது ஷமி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதால், இந்திய அணி கரை சேர்ந்தது. ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது. அதற்கு முந்தைய ஓவரான 49வது ஓவரை பும்ரா மீண்டும் அபாரமாக வீசி 5 ரன்களையே கொடுத்தார்.

நெருக்கடியான ஓவர்

நெருக்கடியான ஓவர்

அந்த ஓவரில் பும்ராவின் 5 யார்க்கர்கள் ஆப்கான் அணிக்கு நெருக்கடியை தந்தது. கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் ஆப்கனுக்கு வெற்றி. ஸ்கோர் 209/7 என்று இருந்தது. அப்போது முகமது ஷமி பந்துவீசினார்.

அரைசதம் கண்ட நபி

அரைசதம் கண்ட நபி

கச்சிதமாக வீசிய யார்க்கர் எதிர்பாராத விதமாக, புல்டாசாக மாற முதல் பந்தை நேராக பவுண்டரி அடித்த முகமது நபி, அருமையான அரைசதத்தை நிறைவு செய்தார். எங்கே தோல்வி தானே என்று முகங்களில் மரண பீதி தெரிய ரசிகர்கள் ஸ்தம்பித்தனர்.

ரசிகர்கள் டென்ஷன்

ரசிகர்கள் டென்ஷன்

இந்திய ரசிகர்கள் வேண்டாத தெய்வமில்லை என்பது போல் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பதற்றத்துடன் காணப்பட்டனர். ஷமி அடுத்த பந்தை வீச நபி அதனை டீப் மிட்விக்கெட்டில் அடித்தார், ஆனால் ஒரு ரன் ஓடவில்லை.

நபி விக்கெட்

நபி விக்கெட்

அடுத்த பந்தை நபி ஒதுங்கிக் கொண்டு ஆட நினைக்க அவரை தொடர்ந்தார் ஷமி. பந்து லேசான யார்க்கர் லென்தாக மாற, ஆவேசம் கொண்ட மட்டும் நபி தூக்கினார் லாங் ஆன் திசையில் அடிக்க... அங்கே பாண்டியா கேட்ச். உலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் அதிர்ந்தது.

ஆலம் போல்டு

ஆலம் போல்டு

அபாரமாக ஆடி இந்திய அணியை அலற வைத்த நபி ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தை ஆலம் லேசாக ஒதுங்கிக் கொண்டு மட்டையை தன் போக்கில் சுற்ற கிளீன் போல்டு. சரியான நேரத்தில் மிக நேர்த்தியாக அதே சமயத்தில் துல்லியமான பந்து வீச்சு.

கிளீன் போல்டு

கிளீன் போல்டு

அடுத்த பந்தை ரஹ்மானும் நேராக அடிக்கப் பார்த்தார், ஆனால் அதுவும் துல்லியமான யார்க்கராக வந்து விழ, போல்டு. உலக கோப்பையில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய ஷமி... அந்த நிமிடத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கதாநாயகன் ஆனார்.

10 முறை ஹாட்ரிக்

10 முறை ஹாட்ரிக்

இது இந்த சீசனில் பதிவான முதல் ஹாட்ரிக் விக்கெட் ஆகும். உலக கோப்பை அரங்கில் ஷமியின் ஹாட்ரிக்குடன் சேர்த்து இது 10வது ஹாட்ரிக் ஆகும். இலங்கை வீரர் லசித் மலிங்கா இந்த சாதனையை 2 முறை நிகழ்த்தியுள்ளார்.

32 ஆண்டுகள் கழித்து சாதனை

32 ஆண்டுகள் கழித்து சாதனை

32 ஆண்டுகளுக்கு பின், உலககோப்பையில் இந்திய பவுலரின் ஹாட்ரிக் சாதனை பதிவாகியுள்ளது. கடைசியாக 1987ல் இந்தியாவின் சேட்டன் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

Story first published: Sunday, June 23, 2019, 12:59 [IST]
Other articles published on Jun 23, 2019
English summary
After 32 years an Indian bowler Mohammed shami made a hat trick wickets in world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X