For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் தந்த பரிசை பறித்துக் கொண்ட சிறுவர்கள்.. ஏமாந்து போன குட்டிப்பையன்.. நீதி கேட்ட ரசிகர்கள்!

அடிலெய்டு : பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ள டெஸ்ட் போட்டியில் 335 ரன்களை அடித்து விளாசிய அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், தனது ஹெல்மெட்டை ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த சிறுவனுக்கு பரிசளித்தார்.

தான் அதிக ரன்களை குவிக்கும் ஆட்டங்களின்போது தனது, கையுறை, ஹெல்மெட் போன்றவற்றை இளம் ரசிகர்களுக்கு பரிசளிக்கும் நடைமுறையை டேவிட் வார்னர் கொண்டுள்ளார்.

இந்நிலையில், சிறுவனுக்கு டேவிட் வார்னர் அளித்த அவரது ஹெல்மெட்டை, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த பெரிய சிறுவர்கள் அடித்து பிடுங்கியதால் அந்த சிறுவன் ஏமாற்றமடைந்தான்.

ஆஸ்திரேலியா –பாகிஸ்தான் 2வது டெஸ்ட்

ஆஸ்திரேலியா –பாகிஸ்தான் 2வது டெஸ்ட்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினர், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தானின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 335 ரன்களை அடித்து தள்ளினார்.

டேவிட் வார்னர் மகிழ்ச்சி ஓட்டம்

டேவிட் வார்னர் மகிழ்ச்சி ஓட்டம்

தன்னுடைய ஒரு கையில் பேட்டையும் மற்றொரு கையில் ஹெல்மெட்டையும் வைத்துக் கொண்டு மைதானத்தை விட்டு ஓட்டமாக மகிழ்ச்சி களிப்புடன் டேவிட் வார்னர் ஓடினார். இதை கண்ட ரசிகர்களும் கைதட்டி மகிழ்ச்சி கூத்தாடினர்.

டேவிட் வார்னரின் வழக்கம்

டேவிட் வார்னரின் வழக்கம்

இதையடுத்து மைதானத்தில் ரசிகர்களை உற்சாகத்துடன் சந்தித்த டேவிட் வார்னர், அங்கிருந்த சிறுவன் ஒருவனுக்கு தன்னுடைய ஹெல்மெட்டை பரிசளித்தார். தொடர்ந்து அந்த ஹெல்மெட்டிற்கு அங்கு பெரிய அளவிலான போட்டியே நடைபெற்றது.

ஹெல்மெட்டை பறித்த மற்ற சிறுவர்கள்

ஹெல்மெட்டை பறித்த மற்ற சிறுவர்கள்

டேவிட் வார்னர் தன்னுடைய முச்சதத்தின் வெளிப்பாடாக, தன்னுடைய ஹெல்மெட்டை சிறுவனுக்கு பரிசளித்த நிலையில், அங்கிருந்த மற்ற சிறுவர்கள், அதை அவனிடம் இருந்து பறித்து சென்றனர். இதனால் அவன் ஏமாற்றத்தில் வாடினான்.

ஹெல்மெட்டை மீட்டுத்தர கோரிக்கை

இந்நிலையில், இளம் சிறுவனின் கைகளில் இருந்து மற்ற சிறுவர்கள் அந்த ஹெல்மெட்டை பறித்துக் கொண்டது குறித்து டிவிட்டர்வாசிகள் தங்களது பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு சண்டைக்கு வந்தனர். சிறுவனது ஹெல்மெட் மீண்டும் அவனுக்கு கிடைக்க நிர்வாகிகள் உதவி புரியவும் கோரிக்கை விடுத்தனர்.

37 பவுண்டரிகள் விளாசல்

37 பவுண்டரிகள் விளாசல்

பாகிஸ்தானின் பந்துவீச்சில் 389 பந்துகளில் 335 ரன்களை டேவிட் வார்னர் தனக்கு சொந்தமாக்கியுள்ளார். 37 பவுண்டரிகளுடன் இதை சாத்தியமாக்கிய வார்னர், கடந்த 1932ல் தென்னாப்பிரிக்க அணி வீரர் டான் பிராட்மேனின் அதிகபட்ச ரன்னான 299 ரன்கள் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

Story first published: Sunday, December 1, 2019, 16:03 [IST]
Other articles published on Dec 1, 2019
English summary
David Warner gifts his Helmet to a kid after his Triple Century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X