For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முன்பு கோலி தற்போது பும்ரா.. இந்திய வீரர்களை வம்பிழுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் காரணம் என்ன?

மும்பை: முன்பு கோலியை வம்புக்கிழுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் தற்போது பும்ராவை சீண்டியுள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியை விட பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் சிறந்தவர் என்பது போல அந்நாட்டு முன்னாள் வீரர் அக்யூப் ஜாவித் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பும்ரா மற்றும் பாகிஸ்தான் பவுலர் சஹாஹீன் ஷா அஃப்ரிடியுடன் ஒப்பிட்டுள்ளார்.

கோலி

கோலி

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், பாபர் ஆஸம், விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டால், பாபர் ஆஸம்தான், கோலியை விட சிறந்த ஷாட்களை ஆடக்கூடியவர். ஆஃப் சைடில் வரும் பந்துகளை விளையாடுவதில் கோலி, பாபர் அஸத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில் அதில் பலமுறை கோலி ஆட்டமிழந்துள்ளார். ஆனால், பாபர் ஆஸத்திடம் அப்படி எந்த பலவீனத்தையும் பார்க்க முடியாது. அதாவது அவர் சச்சின் டெண்டுல்கர் போல் விளையாடுவார் எனத் தெரிவித்தார்.

 பந்துவீச்சு

பந்துவீச்சு

இந்த கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது பும்ராவுடம் பாகிஸ்தான் பவுலர் சஹாஹீன் ஷா அஃப்ரிடியை ஒப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பும்ரா ஒரு சிறந்த பவுலர்தான். குறிப்பாக டெப்த் ஓவர்களில் அவர் சிறப்பாக பந்துவீசுகிறார். எனினும் புதிய பந்துகளை ( தொடக்க ஓவர்கள்) வீசுவதில் பும்ராவை விட ஷா அஃப்ரிடி சிறந்தவர்.

 அநீதி தரப்படுகிறது

அநீதி தரப்படுகிறது

இப்படிபட்ட வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அநீதி இழைக்கிறது. அவரை அனைத்து போட்டிகளிலும் ஆட வைத்து பணிச்சுமையை அதிகரிக்கக்கூடாது. முக்கியமான போட்டிகளில் மட்டுமே அவர் பங்குபெற வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

இருவரின் ரெக்கார்ட்கள்

இருவரின் ரெக்கார்ட்கள்

2016ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பும்ரா இதுவரை 250 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆனால் 2019ம் ஆண்டு அறிமுகமான சஹாஹீன் ஷா அஃப்ரிடி இதுவரை 124 விக்கெட்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 13, 2021, 20:05 [IST]
Other articles published on Apr 13, 2021
English summary
After virat kohli, Aqib Javed's comparied Jasprit Bumrah and Shaheen Afridi on bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X