For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மீண்டும் தீவிர பயிற்சியில் தோனி.. பரபரத்த ரசிகர்கள்!

Recommended Video

Ex Captain Dhoni Net practises in Ranchi

ராஞ்சி : உலக கோப்பை தொடருக்கு பிறகு முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மீண்டும் தனது நெட் பயிற்சியை ராஞ்சியில் துவங்கியுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தாண்டு ஜூலை மாதத்தில் உலக கோப்பை 2019 போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா செமி பைனலுடன் வெளியேறியது. இந்த தொடருக்கு பிறகு இந்தியா பங்கேற்ற பல சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி விலகியுள்ளார்.

ராஞ்சியின் ஜேஎஸ்சிஏ மைதானத்தில் அவர் மேற்கொண்ட நெட் பிராக்டீஸ் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

 சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியவர்

சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியவர்

மிஸ்டர் கூல் கேப்டன் என்று முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி புகழப்படுகிறார். எந்தவிதமான சூழலையும் கூலாக சமாளிக்கும் திறன் தோனிக்கு உண்டு. மேலும் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் தனது திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

 சர்வதேச போட்டிகளை தவிர்த்த தோனி

சர்வதேச போட்டிகளை தவிர்த்த தோனி

கடந்த ஜூலை மாதத்தில் உலக கோப்பை போட்டியிலிருந்து செமி பைனலுடன் இந்தியா வெளியேறியது. அதிலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தோனி தவிர்த்து வருகிறார்.

 பங்கேற்க விரும்பாத தோனி

பங்கேற்க விரும்பாத தோனி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில் காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

 தோனி பங்கேற்கவில்லை

தோனி பங்கேற்கவில்லை

இதேபோல வங்கதேசத்திற்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை. இந்நிலையில், தோனியை விட்டு இந்தியா விலகி வந்துவிட்டதாக தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார். அவருக்கு மாற்றாக ரிஷப் பந்த் இருப்பார் என்றும் கூறினார்.

 மீண்டும் தோனிக்கு வாய்ப்பு

மீண்டும் தோனிக்கு வாய்ப்பு

கடந்த சில தொடர்களில் தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கினார். ஆனால் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், தோனிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 வைரலான வீடியோ

வைரலான வீடியோ

இந்நிலையில் ராஞ்சியில் தோனி மீண்டும் தனது நெட் பிராக்டீசிங்கை துவங்கியுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் தன்னை சர்வதேச போட்டிகளில் இணைத்து கொள்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

இதனிடையே சாம்பியன்கள் விரைவில் தங்களது ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல் தொடர வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். தானும் போட்டிகளில் இருந்து விலகி மீண்டும் 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதாக அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, November 15, 2019, 20:11 [IST]
Other articles published on Nov 15, 2019
English summary
Ex Captain Dhoni Net practises in Ranchi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X