For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'நீ நடத்து கண்ணா'.. தள்ளி நின்று சுந்தர் - பேர்ஸ்டோ மோதலை ரசித்த 'அக்ரெஸ்ஸிவ்' கோலி

அகமதாபாத்: முதல் டி20 போட்டியில், கைக்கு வந்த கேட்சை குறுக்கே நந்தி போல நின்று ஜானி பேர்ஸ்டோ தடுக்க, வாஷிங்டன் சுந்தர் ஏகத்துக்கும் டென்ஷன் ஆகி கத்த, ஒரு நிமிடம் அந்த இடமே இன்ஸ்டன்ட் போர்க்களமானது. இவை அனைத்தையும் மிக ஜாலியாக தள்ளி நின்று என்ஜாய் செய்து கொண்டிருந்தார் 'அக்ரெஸ்ஸிவ்' விராட் கோலி.

3டி பேட்ஸ்மேன் கேள்விப்பட்டு இருப்பீங்க, 3டி படம் கேள்விப்பட்டு இருப்பீங்க. 3டி தோல்வி கேள்விப்பட்டு இருக்கீங்களா? நேற்று நமது டீம் இந்தியா சந்தித்த தோல்வி அத்தகையது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்... சாரி முதல் டி20 போட்டியில் (இந்தியன் டீம் மாதிரி இன்னும் டெஸ்ட் மோடில் இருந்து நான் வெளியே வரல...) இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் அடி வாங்கியது.

 சுண்ணாம்பு அடித்த இங்கிலாந்து

சுண்ணாம்பு அடித்த இங்கிலாந்து

முதலில் ஆடிய இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டும் எடுக்க, சேஸிங் செய்த இங்கிலாந்து, 15.3 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து வென்று, 1-0 என்று லீடிங்கில் உள்ளது. டி20 போட்டிக்கே இது மிக குறைவான ஸ்கோர் தான். இதில், அம்மாம்பெரிய ஸ்டேடியத்தில் போட்டி நடக்க, இந்த ஸ்கோர் தக்குணூண்டு தான் கண்ணுக்கு தெரிந்தது. விடுமா இங்கிலாந்து, வச்சு சுண்ணாம்பு அடித்துவிட்டது.

 வார்த்தை மோதல்

வார்த்தை மோதல்

எனினும், போட்டியின் போது, நம்மூர் பையன் வாஷிங்டன் சுந்தருக்கும், ஜானி பேர்ஸ்டோவுக்கும் நடந்த வார்த்தை மோதல், அட்லீஸ்ட் சாம்பாருக்கு சிக்கன் லெக் பீஸ் கிடைத்த திருப்தியை ரசிகர்களுக்கு கொடுத்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது, 14வது ஓவரை வாஷிங்டன் வீச, டேவிட் மலன் அதை ஸ்ட்ரெய்ட்டில் அடித்தார். அது எளிதான கேட்ச்சாக சுந்தருக்கு வந்தது.

 கடுப்பான வாஷி

கடுப்பான வாஷி

அவரு கைகளை பந்தை நோக்கி எடுத்துச் செல்ல, 'குறுக்க இந்த கவுஷிக் வந்தா' என்பது போல் ரன்னர் எண்டில் நின்றிருந்த ஜானி பேர்ஸ்டோ ஹெல்மெட்டில் பந்து பட்டது. அவர் நினைத்திருந்தால் விலகியிருக்கலாம். ஆனால், அப்படியே நிற்க, கேட்ச் மிஸ்ஸானது. இதனால் கடுப்பான வாஷி, அங்கேயே கோபத்தில் கொப்பளிக்க, ஷாக் ஆகிட்டார் பேர்ஸ்டோ. அவர் கூட பரவாயில்ல போல.. வாஷி கத்தியதைப் பார்த்து அம்பயர் பதறியேவிட்டார்.

வைலண்ட்

வைலண்ட்

சுந்தர் கோபமாக பேச, ஜானி அதற்கு அதிருப்தி தெரிவிக்க, லைட்டாக வார்த்தைப் போர் உருவாக, அம்பயர் நிதின் மேனன் ஓடி வந்து வெள்ளைக் கொடி காட்ட, ஒரு நிமிடம் அந்த இடம் சைலண்ட்டாக வைலண்ட்டாகிவிட்டது. இது அத்தனையையும் கேப்டன் விராட் கோலி பேசாமல் நின்று கொண்டு, 'நீ நடத்து கண்ணா' மோடில் வேடிக்கைப் பார்த்தது தான் ஹைலைட். விராட் கோலி 'ஆக்ரோஷமான' கேப்டன் என்பது குழந்தைக்கு கூட தெரியும். விக்கெட் விழும் போதும் சரி.. ரன்கள் குவிக்கப்படும் போதும் சரி.. அவரால் உணர்ச்சிகளை தோனி போல் கட்டுப்படுத்த தெரியாது. ஆனால், இது ஒவ்வொருத்தரின் குணாதிசயம் சம்பந்தப்பட்டது. ஆக்ரோஷம் தான் கோலி ஸ்டைல். அதேபோல், எதிரணி வீரர்களை முறைப்பது, ஸ்லெட்ஜ் செய்வது என்பதிலும் நம்மால் அத்துப்பிடி. கேப்டனே இப்படி இருக்கும் போது, மற்ற வீரர்கள் ஆக்ரோஷமாக இருக்க மாட்டார்களா என்ன? அதன் சாம்பிள் தான் நேற்று களத்தில் நடந்தது. சுந்தரும், பேர்ஸ்டோவும் மோதிக் கொண்ட போது, அருகில் தான் கோலி நின்றாரே தவிர, சுந்தரை எந்த இடத்திலும் அவர் தடுத்து நிறுத்தவில்லை. மாறாக அனைத்து உரையாடல்களையும் ரசித்துக் கொண்டிந்தார் அக்ரெஸிவ் கோலி.

 கதை முடிஞ்சிருக்கும்

கதை முடிஞ்சிருக்கும்

இந்த சம்பவம் குறித்து ரசிகர்கள் பலரும், இந்த அப்பாவி முகத்துக்கு பின்னாடி இவ்ளோ ஆக்ரோஷமா? என்ற ரீதியில் பதிவிட, ரசிகை ஒருவர் 'அம்பயர் வந்ததால் பேர்ஸ்டோவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது, இல்லையெனில், வாஷிங்டன் அவர் கதையை அங்கேயே முடித்திருப்பார்' என்று ட்வீட் செய்துள்ளார். வெறித்தனமான ரசிகையா இருப்பாரோ!?

Story first published: Saturday, March 13, 2021, 20:51 [IST]
Other articles published on Mar 13, 2021
English summary
aggressive kohli enjoyed washington sundar clash with johny bairstow
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X