ட்ரெண்ட் ஆகும் 'தல'யின் பிறந்தநாள் புகைப்படம்... சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு பகிர்வு

டெல்லி : முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனி எப்போதுமே ரசிகர்களின் அன்பிற்குரியவராக உள்ளார்.

Hats off Bravo! Dhoni Birthday Special Video • Dwayne Bravo

சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஒரு வருடமாக விலகியுள்ள அவர் மீண்டும் எப்போது விளையாடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் 7ம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி முன்னதாகவே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் சில பிரபலங்களும் இணைந்துள்ளனர்.

6 மணி நேரம்.. முன்னாள் வீரரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்!

ரசிகர்களின் கனவு நாயகன்

ரசிகர்களின் கனவு நாயகன்

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி எப்போதுமே அனைவருக்கும் பிடித்தமானவராக காணப்படுகிறார். அவர் விளையாடிய காலத்தில் மட்டுமின்றி, தற்போது விலகியுள்ள காலத்திலும் அவர் எது செய்தாலும் டிரெண்டாகி விடுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொண்டாட்டத்தை துவக்கிய ரசிகர்கள்

கொண்டாட்டத்தை துவக்கிய ரசிகர்கள்

இதனிடையே எம்எஸ் தோனியின் 39வது பிறந்தநாள் வரும் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கென அவரது ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். அவரது பிறந்தநாளையொட்டி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் காணப்படுகிறது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் என அனைத்திலும் இந்த புகைப்படத்தை டிரெண்டாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

காமன் டிபி புகைப்படம்

காமன் டிபி புகைப்படம்

நெக்ஸ்ட்ஜென் ஸ்டூடியோஸ் வடிவமைத்துள்ள இந்த புகைப்படத்தில் ரசிகர்களின் கனவு நாயகன் தோனி பேட்டுடன கம்பீரமாக நின்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லும் அந்த புகைப்படத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகமாக இருப்பவர் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவருக்கு கீழே, சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளனர்.

பிரபலங்களும் புகைப்படம் பகிர்வு

பிரபலங்களும் புகைப்படம் பகிர்வு

ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தோனியின் பிறந்தநாள் டிரெண்டிங் ஆகிவருகிறது. வாட்ஸ்அப், டிவிட்டரில் டிபியாக பலர் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைத்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு உள்ளிட்ட பிரபலங்களும் இந்த புகைப்படத்தை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பலர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மொத்தத்தில் வரும் 7ம் தேதிக்கான கொண்டாட்டம் இப்போதே துவங்கிவிட்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The DP or profile picture reads Happy Birthday Mahendra Singh with large than life portrait of Dhoni
Story first published: Wednesday, July 1, 2020, 18:47 [IST]
Other articles published on Jul 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X