For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது டி20 போட்டியிலும் இப்படியா? அகமதாபாத் பிட்ச்-ல் உள்ள சஸ்பன்ஸ்.. என்ன செய்யப்போகிறார் பாண்ட்யா??

அகமதாபாத்: நியூசிலாந்துடனான முதல் 2 டி20 போட்டிகளில் பிட்ச்-ல் எதிர்பார்க்காத ட்விஸ்ட் இருந்த சூழலில் கடைசி டி20 போட்டி நடைபெறும் அகமதாபாத் பிட்ச் எப்படி உள்ளது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என சமநிலையில் உள்ளனர்.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. வழக்கம் போல இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள் 99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்

ரசிகர்களுக்கு குழப்பம்

ரசிகர்களுக்கு குழப்பம்

இந்திய அணியிடம் அதிரடியை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு கடந்த 2 போட்டிகளும் ஆச்சரியம் காத்திருந்தது. ராஞ்சி, லக்னோ இரு மைதானங்களிலும் அதிகளவில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பேட்டிங் மிகவும் கடினமானது. குறிப்பாக லக்னோவில் நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கு வெறும் 100 ரன்கள் தான். இதனால் பிட்ச் குறித்து கேப்டன் பாண்ட்யாவே அதிருப்தி தெரிவித்திருந்தார்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

இந்நிலையில் 3வது போட்டிக்கான பிட்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரையில் கருப்பு மணல், சிகப்பு மணல் இரண்டிலுமே பிட்ச்-கள் உள்ளன. சிகப்பு மணலில் போட்டி நடந்தால் ஸ்பின்னர்களுக்கும், ஸ்லோயர் பந்துகளுக்கும் தான் சாதகமாக இருக்கும். இதுவே கருப்பு மணல் பிட்ச்-ல் நடந்தால் நல்ல பவுன்ஸர் பந்துகளையும் வேகத்தையும் எதிர்பார்க்கலாம்.

சவால்கள் என்ன?

சவால்கள் என்ன?

இரு பிட்ச்-களிலும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 160 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கு பேட்ஸ்மேன் முதலில் நிதானமாக களத்தை புரிந்து ஆட வேண்டும். செட்டில் ஆன பிறகு அதிரடி காட்டலாம். ஆனால் புதிதாக ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு வந்து, முதல் பந்திலேயே தூக்கி அடிக்க வேண்டும் என்று நினைத்தால் சற்று கடினமான ஒன்று தான்.

டாஸில் என்ன செய்யனும்

டாஸில் என்ன செய்யனும்

இங்கு இதுவரை 6 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 3 முறையும், 2வது பேட்டிங் செய்யும் அணி 3 முறையும் வெற்றி கண்டுள்ளன. எனினும் எந்த பிட்ச்-ஐ தேர்வு செய்கிறார்கள், பனிப்பொழிவு உள்ளதா ஆகியவற்றை வைத்து டாஸில் முடிவெடுக்க வேண்டும். பெரிய பவுண்டரிகள் கொண்ட மைதானம் என்பதால் பெரும்பாலும் பேட்டிங் செய்வது நல்லது.

Story first published: Tuesday, January 31, 2023, 10:06 [IST]
Other articles published on Jan 31, 2023
English summary
Ahmedabad Stadium Pitch report ahead of India vs new zealand 3rd t20 match, here is the details of it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X