அது சாதாரண ஒன்றல்ல..உலகக்கோப்பைக்கு சமமானது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நம்பிக்கை அளிக்கும் ரஹானே

அகமதாபாத்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது குறித்து ரஹானே தெரிவித்துள்ள வார்த்தைகள் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 2 -1 என முன்னிலையில் உள்ளது. 4வது டெஸ்டில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அவர் ஒரு சிறந்த ஃபினிஷராக இருப்பார், தமிழக வீரருக்கு முக்கியத்துவம்... உண்மையை உடைத்த பஞ்சாப் அணி

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், உலகக்கோப்பைக்கு சமமானது என ரஹானே தெரிவித்துள்ளார்.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது. பகிலரவாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியடைந்தால் புள்ளிகள் அடைப்படையில் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு செல்லும்.

எப்படி

எப்படி

டெஸ்ட் போட்டியையும் பிரபலபடுத்த வேண்டும் என்பதற்காக 2019ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியானது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற ஜூன் 18ம் தேதி நடைபெறுகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து அணி சென்று விட்ட நிலையில், மற்றொரு அணியாக இந்திய அணி நுழைவதற்கான சாத்திய கூறுகள் பிராகசமாக உள்ளன.

உலகக்கோப்பை

உலகக்கோப்பை

இந்திய வீரர் இஷாந்த் சர்மா டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் உலகக்கோப்பை போன்றது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அது குறித்து பேசிய ரஹானே, இஷாந்த் தெரிவித்தது சரிதான். டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது உலகக்கோப்பையை வெல்வது போன்றது ஆகும். அதற்காக நாங்கள் இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறோம் என தெரிவித்தார்.

பிட்ச் சர்ச்சை

பிட்ச் சர்ச்சை

பிட்ச் சர்ச்சை குறித்து பேசிய ரஹானே, ஸ்பின் ஆகும் களங்களில் சரியான லைன் பார்த்து ஆட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் அவ்வளவாக நடக்கவில்லை. பந்து மிகவும் ஸ்பின்னாவது குறித்து கவலை பட தேவையில்லை. நாம் எவ்வளவு சரியாக லைன் பார்த்து ஆடுகிறோம் என்பதிலேயே உள்ளது. அதே போல் ஸ்டம்ப்பையும் சரியான முறையில் கவர் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ajinkya Rahane supports ishant sharma on WTC winning
Story first published: Wednesday, March 3, 2021, 13:03 [IST]
Other articles published on Mar 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X