For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வித்தியாசமான பாணி, உத்திகளை செயல்படுத்தணும்... கேப்டனுக்கு சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மெல்போர்னில் 2வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே செயல்பட உள்ளார்.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

கேன் வில்லியம்சன் சொன்ன அந்த வார்த்தை.. ஆடிப்போன ஹைதராபாத்.. சிஎஸ்கே அணிக்கு தாவும் ஜென்டில்மேன்! கேன் வில்லியம்சன் சொன்ன அந்த வார்த்தை.. ஆடிப்போன ஹைதராபாத்.. சிஎஸ்கே அணிக்கு தாவும் ஜென்டில்மேன்!

இந்நிலையில் நாளைய போட்டியில் வித்தியாசமான பாணி மற்றும் உத்திகளை கேப்டன் ரஹானே கையாள வேண்டும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.

2வது டெஸ்ட் நாளை துவக்கம்

2வது டெஸ்ட் நாளை துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் மெல்போர்னில் நாளைய தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. 4 போட்டிகளை கொண்ட தொடரில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில் நாளைய போட்டியில் வெற்றி கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உள்ளது.

குறைவான அனுபவம்

குறைவான அனுபவம்

கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் இல்லாத நாளைய போட்டியை இந்திய அணி அஜிங்க்யா ரஹானே தலைமையில் எதிர்கொள்ளவுள்ளது. ரஹானே ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ள போதிலும், அந்த குறைவான அனுபவத்துடன் ஆஸ்திரேலியா போன்ற வலிமையான அணக்கு எதிராக தலைமை பொறுப்பை ஏற்று நடத்தவுள்ளார்.

சச்சின் அறிவுறுத்தல்

சச்சின் அறிவுறுத்தல்

இந்நிலையில் நாளைய போட்டியில் வித்தியாசமான பாணி மற்றும் உத்திகளை கேப்டன் அஜிங்க்யா ரஹானே கையாள வேண்டும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார். ரஹானே பொறுமையானவர் என்றும் அதனால் அவருடைய தீவிரம் குறைவானது என்று அர்த்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

குறையாத தீவிரம்

குறையாத தீவிரம்

ஒவ்வொருவரும் தங்களுடைய தீவிரத்தன்மையை வித்தியாசமாக வெளியில் காட்டுவார்கள் என்றும், சத்தீஸ்வர் புஜாரா பொறுமையானவர் என்பதால் அவருடைய தீவிரத்தன்மை குறைவானது என்று கூற முடியாது என்றும் சச்சின் மேலும் கூறினார். சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்களது தீவரத்தை வெளிக்காட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Story first published: Friday, December 25, 2020, 12:03 [IST]
Other articles published on Dec 25, 2020
English summary
Ajinkya’s would be a different style, different strategies -Sachin Tendulkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X