For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நொண்டி சாக்கு சொல்லாத.. இதைக் கூட அடிக்க தெரியலனா வேஸ்ட்" - பாக்., அணியை பிராண்டி எடுத்த அக்தர்

இஸ்லாமாபாத்: இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டி தோல்விக்கு பிறகு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசம் தெரிவித்த கருத்தை, சோயப் அக்தர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தாறுமாறாக தோற்றது.

முழு பலம் பொருந்திய இலங்கை கிரிக்கெட் அணி, 5 அறிமுக வீரர்களுடன் விளையாடிய இங்கிலாந்து அணியிடம் படுமோசமாக தோற்க, தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அவரோட அந்த அட்வைஸ்... என்னோட வாழ்க்கையையே மாத்திடுச்சு... பாபர் அசாம் நெகிழ்ச்சி! அவரோட அந்த அட்வைஸ்... என்னோட வாழ்க்கையையே மாத்திடுச்சு... பாபர் அசாம் நெகிழ்ச்சி!

 ஒயிட் வாஷ்

ஒயிட் வாஷ்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. அதற்கு இன்னும் ஒரு மாத காலம் இடைவெளி இருப்பதால், இந்த நேரத்தை பயன்படுத்தி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் இங்கிலாந்து மோதி வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இலங்கை தொடரில், டி20, ஒருநாள் என்று வாஷ் அவுட் செய்து திருப்பி அனுப்பியது இலங்கை. இந்த சூழலில், தற்போது பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

 பாபர் அசம்

பாபர் அசம்

இரு அணிகளும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மோதுகின்றன. இதன் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜுலை.8ம் தேதி கார்டிஃபில் நடைபெற்றது. இங்கிலாந்து வீரர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், இரண்டாம் தர இங்கிலாந்து அணியை அந்நாட்டு வாரியம் களமிறக்கியது. 5 வீரர்களை இந்த போட்டியில் அறிமுகம் செய்தது இங்கிலாந்து. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் தங்களது முழு பலத்துடன் விளையாடியது. பாபர் அசம் கேப்டனாக செயல்பட, ஃபக்கர் சமான், இமாம் உல்-ஹக் என்று டாப் வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர்.

 மெகா வெற்றி

மெகா வெற்றி

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், யாரென்றே தெரியாத இங்கிலாந்தின் இளம் பவுலர்களிடம் தடுமாறியது. 35.2 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 141 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஃபக்கர் சமான் 47 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சகிப் முகமது என்ற வீரர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் பவுலிங்கை சிதறடித்து, ஒரேயொரு விக்கெட்டை மட்டும் இழந்து, 21.5வது ஓவரிலேயே சேஸிங் செய்து வெற்றிப் பெற்றது.

 வீரனுக்கு இது சகஜம்

வீரனுக்கு இது சகஜம்

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசம், "இது ஒரு பெரிய பின்னடைவு அல்ல, நிச்சயமாக, ஒவ்வொரு அணிகளுக்கும் மோசமான நாட்களும் இருக்கும், நல்ல நாட்களும் இருக்கும். கடந்த சில தொடர்களில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறோம். நான் வீரர்களுடன் உட்கார்ந்து பேசுவேன். நான் அவர்களிடம், "ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்" என்று கூறியிருந்தார்.

Recommended Video

Pakistanஐ வீழ்த்திய England B Team! 1st ODIயில் மோசமான தோல்வி | OneIndia Tamil
 காட்டமான விமர்சனம்

காட்டமான விமர்சனம்

பாபர் அசமின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ""இது அனைத்து நொண்டி சாக்கு. விக்கெட்டில் அசாதாரண பவுன்ஸ் போன்று எதுவும் இல்லை. இங்கிலாந்தில் எப்போதும் பந்தில் ஒரு வேகம் இருக்கும். அந்த வேகத்தை கூட நீங்கள் கையாள முடியாவிட்டால், எப்படி கிரிக்கெட் செய்வீர்கள்?" என்று காட்டமாக அக்தர் விமர்சித்துள்ளார்.

Story first published: Saturday, July 10, 2021, 19:04 [IST]
Other articles published on Jul 10, 2021
English summary
Akhtar slams Babar Azam 'not a setback' comment - அக்தர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X