அவர்களும் அதே பிட்ச்-லதானே விளையாண்டாங்க.... இங்கிலாந்து பேட்ஸ்மேனை விளாசும் சோயிப் அக்தர்

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து தோற்ற நிலையில், அது குறித்து முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 - 3 என்ற புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது.

உலக டெஸ்ட் தரவரிசை... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... ரெண்டுலயும் இந்தியாதான் டாப்பு!

இதனால் இங்கிலாந்து அணியை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், இங்கிலாந்து வீரர்களுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தோல்வி

தோல்வி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அதற்கு அடுத்த 3 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரில் தோல்விபெற்றது. இதனால் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பையும் இழந்தது.

சந்தேகம்தான்

சந்தேகம்தான்

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோபிப் அக்தர், இங்கிலாந்துக்கு இது மிகவும் மோசமான தோல்வியாகும். இதன் பிறகு அவர்கள் எப்படி மீண்டும் சிறப்பாக ஆட போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் துணை கண்டங்களில் உள்ள ஸ்பின் களங்களில் எப்படி ஆட வேண்டும் என்ற கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிட்ச் சர்ச்சை

பிட்ச் சர்ச்சை

இந்த தொடரில் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவும் இதே பிட்ச்-ல் தானே ஆடியது. அவர்கள் மட்டும் 365 ரன்கள் எடுக்கவில்லையா?, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களால் ரன் குவிக்க முடியுமானால், இங்கிலாந்து வீரர்களால் ஏன் முடியாது என சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்தர் பாராட்டு

அக்தர் பாராட்டு

இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அக்‌ஷர் பட்டேல் 27 விக்கெட்களை எடுத்தார். இதுகுறித்து பேசிய அக்தர், ஸ்பின் பிட்ச்களில் ஆடியதால் மட்டும் அக்‌ஷர் பட்டேல் சிறப்பாக செயல்படவில்லை, அவர் ஒரு திறமையான வீரரும் கூட, அவர் எந்த ஒரு சூழலிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் இதே போன்று ஆடினால், அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Akhtar slams England Team's Surrender to India in Test
Story first published: Sunday, March 7, 2021, 14:17 [IST]
Other articles published on Mar 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X