For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லா டைம்லயும் இவங்க 5 பேர்தான் சிறப்பு... குக் பட்டியலில் இடம்பிடித்த விராட் கோலி

லண்டன் : அனைத்து காலகட்டத்திலும் மேற்கிந்திய தீவுகளின் வீரர் பிரையன் லாரா சிறப்பான பேட்ஸ்மேன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள குக், அனைத்து வடிவங்களிலும் ரன்களை குவிப்பதில் விராட் கோலி சிறப்பானவர் என்றும் கூறியுள்ளார்.

அனைத்து காலகட்டத்திலும் சிறப்பான 5 வீரர்களை பட்டியலிட்டுள்ள குக், ரிக்கி பாண்டிங், ஜாக்குவஸ் காலிஸ் மற்றும் குமார சங்ககாராவையும் பட்டியலில் இணைத்துள்ளார்.

பும்ரா போன்றவர்கள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் -அக்ரம்பும்ரா போன்றவர்கள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் -அக்ரம்

59 போட்டிகளில் கேப்டன்

59 போட்டிகளில் கேப்டன்

முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் அலாஸ்டர் குக், அந்த அணிக்காக 59 போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டவர். கொரோனா வைரஸ் ஊடரங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள குக், சண்டே டைம்சின் கேள்வி -பதில் செஷனில் பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் பதிலளித்தார்.

5 பேர் பட்டியல்

5 பேர் பட்டியல்

அனைத்து காலகட்டங்களிலும் சிறப்பான 5 பேட்ஸ்மேன்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த குக், அந்த பட்டியலில் பிரையன் லாராவை முன்னிலை படுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை குவித்துள்ள ஒரே வீரர் லாரா என்பதை குக் சுட்டிக் காட்டியுள்ளார். லாரா ஓய்வு பெற்றபோது, 131 டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களையும் 299 ஒருநாள் போட்டிகளில் 10,405 ரன்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியப்புக்குள்ளாக்கிய லாரா

வியப்புக்குள்ளாக்கிய லாரா

கடந்த 2004ல் நடைபெற்ற எம்சிசி -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டி அருண்டெல்லில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிரையன் லாரா, மதிய உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளைக்கு இடையில் சதத்தை அடித்து அனைவரையும் வியப்புக்ள்ளாக்கியதை நினைவு கூர்ந்த குக், இந்த சாதனைக்கு தான் சாட்சியானதையும் வெளிப்படுத்தினார்.

சிறப்பான விராட் கோலி

சிறப்பான விராட் கோலி

மேலும் அனைத்து காலகட்டத்திலும் சிறப்பான ஐந்து கிரிக்கெட வீரர்களில் லாராவிற்கு அடுத்தபடியாக விராட் கோலி, ரிக்கி பாண்டிங், ஜாக்குவஸ் காலிஸ் மற்றும் குமார சங்ககாராவையும் பட்டியலிட்ட குக், கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக ரன்களை குவித்து வருபவர் இந்திய கேப்டன் விராட் கோலி என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, May 11, 2020, 14:50 [IST]
Other articles published on May 11, 2020
English summary
Virat Kohli scores so freely in all three formats -Alastair Cook
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X