For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

MI vs CSK : என்ன மனுசரய்யா… நீர்..! 100 விக்கெட் எடுத்து சாதித்த பிராவோ.. குவியும் வாழ்த்துகள்

Recommended Video

சென்னைக்காக 100 விக்கெட் எடுத்து பிராவோ புதிய சாதனை

மும்பை:சென்னை அணியின் செல்லப்பிள்ளையான... ஆல்ரவுண்டர் பிராவோ சிஎஸ்கே அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார். டிவைன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 142 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளார்.

அதில் குறிப்பாக ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதாவது 27 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் டிவைன் பிராவோ.

செம ஸ்பின்.. கஷ்டமான கேட்ச்.. ஜடேஜா - தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா! செம ஸ்பின்.. கஷ்டமான கேட்ச்.. ஜடேஜா - தோனியிடம் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மா!

100 விக்கெட்டுகள் சாதனை

100 விக்கெட்டுகள் சாதனை

தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் பிராவோ இதுவரை சிஎஸ்கே அணிக்காக 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக 100வது விக்கெட்டை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சூர்ய குமார் யாதவ்

சூர்ய குமார் யாதவ்

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக ஆடி 59 ரன்கள் குவித்தார் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ். அவரை ஆட்டமிழக்க செய்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

முதல் நபர் இவர்தான்

முதல் நபர் இவர்தான்

18வது ஓவரில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சென்னை அணிக்காக ஆடி 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

கோட்டை விட்ட மோகித்

கோட்டை விட்ட மோகித்

13வது ஓவரிலேயே அவர் இந்த சாதனையை படைத்திருக்க வேண்டும். அந்த ஓவரை பிராவோ வீசும்போது குருணால் பாண்டியா அடித்து ஆட முற்பட்டார். ஆனால்... அந்த பந்து நேராக மோகித் கைகளுக்கு சென்றது. அதை கேட்ச் பிடிக்காமல அவர் கோட்டை விட்டார்.

பிராவோவுக்கு வாழ்த்துகள்

பிராவோவுக்கு வாழ்த்துகள்

அதன் பின்னர் 18வது ஓவரில் இந்த சாதனையை பிராவோ படைத்துவிட்டார். புதிய சாதனையை படைத்துள்ள பிராவோவுக்கு சக வீரர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் இருந்தும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பிராவோவுக்கு அடுத்தார்போல், அஸ்வின் (90), மோர்கல்(76), ஜடேஜா (69), மோகித் சர்மா (57) ஆகியோர் உள்ளனர்.

Story first published: Wednesday, April 3, 2019, 23:08 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
All rounder Bravo created the record for the first player to bring 100 wickets for csk.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X