ஒரே அதிர்ஷ்டம்தான்! மும்பை அணி வீரர்களுக்கு இந்தாண்டு காத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்புகள்- விவரம்!

சென்னை: மும்பை அணி வீரர்கள் இந்தாண்டு பல்வேறு சாதனைகள் படைக்க காத்துள்ளனர்.

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும்9ம் தேதி தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய 5 சீசன்களில் கோப்பையை தட்டியுள்ளது. இதற்கு காரணம் பல வீரர்கள் கிட்டத்தட்ட 5 - 6 வருடங்களாக அணியில் நிலையாக வைத்துள்ளது தான் எனக்கூறப்படுகிறது.

மும்பை அணியை தடுக்க அந்த ஒரு அணியால் மட்டுமே முடியும்... அடித்து கூறும் முன்னாள் வீரர்..அவ்ளோ பலமா?

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் வீரர்கள் இந்தாண்டு பல சாதனைகளை படைக்க காத்துள்ளனர். அவற்ற பார்க்கலாம்..

 தோல்வி

தோல்வி

கடந்த 2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது. எனினும் அதன் பின்னர் சிறப்பாக செயல்பட்டு ப்ளே ஆஃப்-க்குள் நுழைந்து விடுகிறது. எனவே இந்தாண்டு ஐபிஎல்-ல் முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 8 ஆண்டுகளாக முடியாத விஷயத்தை இந்தாண்டு செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித்

ரோகித்

மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் இதுவரை 213 சிக்ஸர்களை விளாசியுள்ளார், அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தோனியை (216) இந்தாண்டு ரோகித் சர்மா முந்த வாய்ப்புள்ளது.

அதே போல கேப்டனாக ரோகித் சர்மா 68 போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார். அதிக வெற்றிகள் பெற்றுக்கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் தோனி (110) முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் கம்பீர் (68) எனவே இந்தாண்டு ரோகித் சர்மா 4 வெற்றிகளை பெற்றுக்கொடுத்தால் 2வது சிறந்த கேப்டனாக ஆகலாம்.

பாண்டியா சகோதரர்கள்

பாண்டியா சகோதரர்கள்

ஹர்த்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் ஐபிஎல் தொடரில் 50 விக்கெட்களை எடுத்த வீரர்கள் என்ற மைல்கல்லை எட்டலாம். ஹர்த்திக் 42 விக்கெட்களும், க்ருணால் 46 விக்கெட்களும் இதுவரை எடுத்துள்ளனர்.

 கெயிரீன் பொல்லார்ட்

கெயிரீன் பொல்லார்ட்

ஐபிஎல் தொடரில் பொல்லார்ட் இதுவரை 197 சிக்ஸர்களை விளாசியுள்ளார். எனவே இந்த சிசசனில் 3 சிக்ஸர்களை அடித்தால், ஐபிஎல்-ல் 200 சிக்ஸர்களை அடித்த 3வது அயல் நாட்டு வீரர் ஆவார். இதற்கு முன்னர் டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

 குயிண்டன் டிகாக்

குயிண்டன் டிகாக்

மும்பை அணி ஓபனிங் வீரர் டிகாக் இதுவரை 66 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் ஆடி 1959 ரன்களை எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 14 அரை சதமும் அடங்கும். எனவே இன்னும் 41 ரன்களை இவர் எடுத்தால் ஐபிஎல்-ல் 2000 ரன்களை கடந்த 4வது தென்னாப்பிரிக்க வீரர் ஆவார். இதற்கு முன்னர் டிவில்லியர்ஸ், ஜே.பி.டும்மினி, டூப்ளசீஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
All stats of Mumbai Indians that you need to know ahead of the IPL 2021
Story first published: Wednesday, April 7, 2021, 18:35 [IST]
Other articles published on Apr 7, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X