For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஒன்னுமே சொல்ல மாட்றாங்க” ஐபிஎல் அணிகளிடம் முக்கிய விஷயத்தை மறைக்கும் பிசிசிஐ.. அதிகரிக்கும் புகார்

மும்பை: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளில் அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் பங்கேற்கவுள்ளனர்.

“தோனி கற்றுக்கொடுத்த வித்தை”.. முழு உடற்தகுதி பெற்ற ஹர்திக் பாண்ட்யா.. ஐபிஎல் குறித்து மனம் திறப்பு!“தோனி கற்றுக்கொடுத்த வித்தை”.. முழு உடற்தகுதி பெற்ற ஹர்திக் பாண்ட்யா.. ஐபிஎல் குறித்து மனம் திறப்பு!

மெகா ஏலம்

மெகா ஏலம்

2 நாட்களுக்கு பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி நடைபெறும் நகரம் எதுவென்று இன்னும் பிசிசிஐயால் இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அங்கு அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது. நாளொன்றுக்கு சுமார் 20,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் அணிகளின் குற்றச்சாட்டு

ஐபிஎல் அணிகளின் குற்றச்சாட்டு

இதுகுறித்து பேசியுள்ள முன்னணி ஐபிஎல் அணியின் அதிகாரி, 2 வாரங்களே உள்ளது, ஆனால் இன்னும் எங்களுக்கு மெகா ஏலம் எங்கு நடைபெறுகிறது எனத்தெரியவில்லை. 10 நாட்களுக்கு முன்பு ஒரு இடம் கூறினர். தற்போது மறுக்கின்றனர். இதனால் பயண ஏற்பாடுகளை செய்ய குழப்பத்தில் ஆழ்ந்துள்ளோம். இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனக்கூறியுள்ளார்.

 பிசிசிஐ கொடுத்த பதில்

பிசிசிஐ கொடுத்த பதில்

இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ அதிகாரி, சில விஷயங்கள் எங்களின் கைகளை மீறி சென்றுவிட்டன. பொறுமை காத்தே தீர வேண்டும். ஹோட்டல்களை புக் செய்வது, ஏற்பாடுகள் செய்வதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. கொரோனா பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஒருவேளை வேறு இடத்திற்கு மாற்றினால் குறுகிய காலத்திற்கு முன்னதாக தான் அறிவிப்போம் எனக்கூறியுள்ளார்.

Recommended Video

IPL 2022: Mumbai city Finalized As Venues For The Tournament | Oneindia Tamil
ஐபிஎல் மாற்றம்

ஐபிஎல் மாற்றம்

மெகா ஏலத்தை போன்று, ஐபிஎல் போட்டிகளையே எங்கு நடத்துவது என புரியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. இந்த முறை இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால், தென்னாப்பிரிக்காவுக்கு போட்டிகள் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Story first published: Thursday, January 27, 2022, 18:00 [IST]
Other articles published on Jan 27, 2022
English summary
BCCI still not finalise the venue for IPL 2022 Auction, All IPL Franchises are Confused
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X