For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை டி20 கிரிக்கெட்: வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் விதிமுறைகள் பற்றிய முழு விவரம்

By Veera Kumar

நாக்பூர்: உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித்தொடர் நாக்பூரில் இன்று தொடங்க உள்ளது. குட்டி அணிகள் பங்கேற்கும் தகுதி சுற்று முதலில் நடைபெற உள்ளது. 15ம் தேதிக்கு பிறகுதான், பெரிய அணிகள் கோதாவில் குதிக்க உள்ளன.

முதலில் 60 ஓவர்களுடன் தொடங்கிய, கிரிக்கெட் உலக கோப்பை அதன்பிறகு 50 ஓவர் கோப்பையாக நடைபெற்றுவருகிறது. இதன் நடுவே, 20 ஓவர் கிரிக்கெட்டுக்கும் உலக கோப்பை தொடர் நடத்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ளது 6-வது டி20 உலக கோப்பை போட்டித்தொடராகும். முதல் உலக கோப்பை தொடரை டோணி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியிருந்தது.

இன்று தொடக்கம்

இன்று தொடக்கம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்த ஒரு பார்வை இதோ: நடப்பு உலக கோப்பை தொடர் மார்ச் 8ம் தேதியான இன்று தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.

16 அணிகள்

16 அணிகள்

ஐசிசியில் முழு அளவில் உறுப்பினர்களாக உள்ள 10 மற்றும் 6 துணை உறுப்பினர் நாடுகள் என, உலக கோப்பை கிரிக்கெட்டில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.

சூப்பர் 10

சூப்பர் 10

முதல் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள்., இரண்டாவது சுற்று சூப்பர் 10 என்று அழைக்கப்படும்.

ஏ பிரிவு

ஏ பிரிவு

குரூப்-ஏ பிரிவில், வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் விளையாட உள்ளன.

பி பிரிவு

பி பிரிவு

குரூப்-பி பிரிவில், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஹாங்காங், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.

அடுத்த சுற்று

அடுத்த சுற்று

சூப்பர்-10 சுற்றில், ஒவ்வொரு குரூப்பிலும் இருந்து தேர்வாகும், மொத்தம் 4 அணிகள், அரையிறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும்.

பெரிய அணிகள்

பெரிய அணிகள்

குரூப்-1ல், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும், குரூப் பி அணிகளில் ஏதாவது ஒன்று இடம் பெறும்.

இந்தியா, பாகிஸ்தான்

இந்தியா, பாகிஸ்தான்

குரூப்-2ல், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன், தகுதி சுற்றில் வெற்றி பெறும் குரூப் ஏ அணிகளில் ஏதாவது ஒன்று இடம் பெறும்.

இன்று முதல் ஆட்டம்

இன்று முதல் ஆட்டம்

இந்த தொடரில் தொடக்க ஆட்டம் ஜிம்பாப்வே-ஹாங்காங் நடுவே இன்று பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. 2வது ஆட்டம் ஸ்காட்லாந்து-ஆப்கானிஸ்தான் நடுவே அதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நேரலை

நேரலை

இந்தியாவில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இந்த போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. www.icc-cricket.com என்ற வெப்சைட் முகவரிக்கு சென்று ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம். இந்தியா ஆடும் போட்டிகள் மற்றும், அரையிறுதி, இறுதி போட்டிகளை தவிர்த்து பிற போட்டிகளுக்கு மைதானத்திலும் டிக்கெட் வினியோகம் நடைபெறும்.

ரூல்ஸ் எப்படி..

ரூல்ஸ் எப்படி..

சூப்பர் 10 சுற்றில், இருந்து 4 அணிகள் செமி-பைனலுக்கு தேர்வாக வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒருவேளை, பல அணிகள் ஒரே புள்ளியை பகிர்ந்திருந்தால், சூப்பர் 10 சுற்றில் அதிக வெற்றி பெற்ற அணி எதுவோ அது செமி-பைனலுக்கு அனுப்பப்படும். இரு அணிகள் ஒரே மாதிரியாக வெற்றியை பெற்றிருந்தால் ரன்-ரேட் கணக்கில் எடுக்கப்படும்.

வெற்றி-தோல்வி

வெற்றி-தோல்வி

அரையிறுதி போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 'டை' ஆக முடிந்துவிட்டால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்படும். செமி-பைனல் போட்டியை, மழை உள்ளிட்ட காரணங்களால், நடத்த முடியாமல் போனால், சூப்பர்-10 சுற்றில் எந்த அணி முதலிடம் பிடித்ததோ அது பைனலுக்கு முன்னேறும்.

பைனல்

பைனல்

இறுதி போட்டியில் யாருக்கும் வெற்றி தோல்வி கிடைக்காமல், போட்டி டை ஆகிவிட்டால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். இறுதி போட்டி நடத்தப்படாமல் கைவிடப்பட்டால், இரு அணிகளுமே கோப்பையை பகிர்ந்துகொள்ளும்.

Story first published: Tuesday, March 8, 2016, 11:37 [IST]
Other articles published on Mar 8, 2016
English summary
The ICC World Twenty20 2016 tournament is set to begin in Nagpur today (March 8) with 2 matches scheduled on the opening day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X