For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களுக்கு வேற கேள்வியே தெரியாதா? நெகடிவ்வாக கேட்கறீங்க... பொங்கிய பயிற்சியாளர்

லார்ட்ஸ்: கடைசி 3 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது குறித்து எழும்பிய சர்ச்சைக்கு, பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆவேசம் அடைந்தார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவிய பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி கண்டது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், ஹாரிஸ் சோகைலின் அதிரடி பேட்டிங்கால் தான் அந்த அணி 308 ரன்களை குவித்தது.

Always talking about negative thoughts says pakistan coach mickey arthur

59 பந்துகளில் 89 ரன்களை குவித்தார் சோகைல். சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும், அவரால் டெத் ஓவர்களில் பெரிய ஷாட் ஆட முடியாததால் அதை தவற விட்டு கடைசி ஓவரில் அவுட்டும் ஆனார். எனினும் அவரது அதிரடி பேட்டிங்கால் 308 ரன்களை குவித்த பாகிஸ்தான், 259 ரன்களுக்கு தென் ஆப்ரிக்காவை சுருட்டி தள்ளி, வெற்றி கண்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். அப்போது அவரிடம் சோகைல் ஆட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆத்திரப்பட்ட ஆர்தர் கூறியதாவது: ஹாரிஸ் 59 பந்துகளில் 89 ரன்கள் அடித்துள்ளார்.

எதற்காக பாகிஸ்தான் வீரர்களை பற்றி மட்டும் எதிர்மறையாகவே பேசுகிறீர்கள்? இது ஹாரிஸ் சோகைலின் மிகச்சிறந்த இன்னிங்ஸ். எப்போதும் ஏன் பாக். அணியை பற்றி நெகடிவ்வாக எழுதுகிறீர்கள்? என்றார்.

Story first published: Monday, June 24, 2019, 17:47 [IST]
Other articles published on Jun 24, 2019
English summary
Always talking about negative thoughts says Pakistan coach mickey Arthur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X