For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி டாப் ஆர்டர்ல விளையாடறத தான் நான் எப்பவுமே விரும்புவேன்... சவுரவ் கங்குலி

டெல்லி : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டாப் ஆர்டரில் விளையாடியிருந்தால், இன்னும் பல உயரங்களை தொட்டிருக்கலாம் என்று முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தோனி சிறந்த கேம் பினிஷராக காணப்படுகிறார். இதனால் அவர் லோ ஆர்டரில் அதிகமாக விளையாடுவார். ஆட்டத்தையும் சிறப்பாக முடித்து கொடுப்பார்.

கடந்த 2004 டிசம்பர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3வது இடத்தில் களமிறங்கி 148 ரன்களை தோனி எடுத்ததையும் கங்குலி சுட்டிக் காட்டியுள்ளார்.

குவிந்த வாழ்த்துக்கள்

குவிந்த வாழ்த்துக்கள்

நேற்று தன்னுடைய 39வது பிறந்ததினத்தை ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். ரசிகர்களும் கடந்த சில தினங்களாகவே அவரது பிறந்ததினத்தையொட்டி சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்தனர்.

டாப் ஆர்டரில் விளையாடுவதை விரும்புவேன்

டாப் ஆர்டரில் விளையாடுவதை விரும்புவேன்

இந்நிலையில் பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் மயங்க் அகர்வால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, தோனி கேம் பினிஷர் மட்டுமல்ல. உலகளவில் சிறந்த பேட்ஸ்மேனும் கூட என்று தெரிவித்துள்ளார். அவர் ஆட்டத்தை சிறப்பாக முடித்து கொடுப்பது குறித்து மட்டுமே அனைவரும் சிலாகித்து பேசுகின்றனர். ஆனால் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதால் அவர் டாப் ஆர்டரில் விளையாடுவதையே நான் விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்

பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்

கடந்த 2004 டிசம்பர் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி விளையாடிய எம்எஸ் தோனி 148 ரன்களை குவித்தார். இதை சுட்டிக்காட்டிய கங்குலி, ஒருநாள் போட்டிகளில் நெருக்கடி நேரத்திலும் சிறப்பான வீரர்கள் தங்களை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம் தோனிதான். அதனால் தான் அவர் ஸ்பெஷல் என்றுள்ளார்.

மகிழ்ச்சியான விஷயம்

மகிழ்ச்சியான விஷயம்

அணியில் எம்எஸ் தோனியை தான் தான் தேர்ந்தெடுத்தேன் என்று பெருமையுடன் கூறியுள்ள கங்குலி, ஆனால் ஒரு கேப்டனாக அது தன்னுடைய வேலைதான் என்று தெரிவித்துள்ளார். ஒருவர் மீது நம்பிக்கை வைத்து அவரை தேர்ந்தெடுக்கும்போது, அதற்கு சாதகமாக அவர் நடந்து கொள்வது பெருமை அளிக்கும் விஷயம் என்று தெரிவித்த கங்குலி, இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, July 8, 2020, 20:54 [IST]
Other articles published on Jul 8, 2020
English summary
Dhoni would have been even more lethal if he batted higher in the order -Ganguly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X