யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. "அந்த" வீரரை களமிறக்குகிறதா இந்தியா? - செம வியூகம்

சவுத்தாம்ப்டன்: யாருமே எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்டை இந்திய அணி முன்னெடுக்கும் என்று அமித் மிஸ்ரா பீடிகை போட்டிருக்கிறார். செம இன்ட்ரெஸ்டிங்கா இருக்கே!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கான பிளேயிங் லெவனை போட்டிக்கு ஒருநாள் முன்னதாகவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. 5+1+5 ஃபார்முலா உபயோகிக்கப்பட்டது. அதாவது, 5 பேட்ஸ்மேன்கள், 1 விக்கெட் கீப்பர் மற்றும் 5 பவுலர்கள். அதில் இருவர் ஸ்பின்னர்ஸ்.

WTC Final: உச்சி தலை அதிர .. வெளுக்கும் வெயில்.. இறுதிப் போட்டி WTC Final: உச்சி தலை அதிர .. வெளுக்கும் வெயில்.. இறுதிப் போட்டி

அதன்படி இந்திய அணி பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா என 3 வேகப்பந்துவீச்சாளர்களும் அஸ்வின் மற்றும் ஜடேஜா என 2 ஸ்பின்னர்களையும் கொண்டு வியூகம் அமைத்தது.

தாக்கம் இருக்காது

தாக்கம் இருக்காது

ஆனால், சவுத்தாம்ப்டனில் நேற்று முழுவதும் மழை பெய்திருப்பதால், பிளேயிங் லெவனில் தேவைக்கேற்ப மாற்றம் செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளனர். மழை பெய்திருப்பதால், ஃபாஸ்ட் பவுலர்களுக்கு ஏற்ற பிட்ச்சாக இது உருமாற அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக ஸ்விங் இருக்கும் என்பதால், ஸ்பின்னர்களால் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என்றே கூறப்படுகிறது.

அஷ்வின் நிலை?

அஷ்வின் நிலை?

எனவே, இந்திய அணியில் ஒரு ஸ்பின்னரை உட்கார வைத்து, அதற்கு பதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்ப்பது அணிக்கு வலு சேர்க்கும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதாவது, ஹனுமா விஹாரியை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படியெனில், அஷ்வினோ, அல்லது ஜடேஜாவோ அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்குவது என்று முடிவு செய்துவிட்டால், அஷ்வின் தான் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.

ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்

ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்

இந்த நிலையில், முன்னாள் இந்திய ஸ்பின்னர் அமித் மிஸ்ரா வேறு ஒரு பாயிண்ட்டை முன்வைத்துள்ளார். அவர், "இப்போது உள்ள சூழலில், இந்திய அணியில் மாற்றம் தேவை தான். அது சரியான மாற்றமாக இருக்க வேண்டும். நம்மிடம் ஃபாஸ்ட் பவுலர் ஆல்ரவுண்டர் இல்லாததன் சிக்கல், இதுபோன்ற சூழல்களில் தான் வெளிச்சத்துக்கு வருகிறது. ஹர்திக் பாண்ட்யா நம்முடைய பெஸ்ட் ஆல் ரவுண்டர். ஆனால், அவர் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.

ஒர்க் அவுட் ஆகும்

ஒர்க் அவுட் ஆகும்

பாண்ட்யாவுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டவர் ஷர்துல் தாகூர். அவர் தான் அணியில் உள்ள ஒரே ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர். அவரால் ஓரளவுக்கு பேட்டிங்கும் செய்ய முடியும். எனவே, இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால், ஹனுமா விஹாரிக்கு பதில், ஷர்துல் சேர்க்கப்படலாம். அணியின் முக்கியமான ஃபாஸ்ட் பவுலர்கள் டயர்டாகும் போது, அவரது பந்துவீச்சு அணிக்கு கைக்கொடுக்கும். பந்து ஸ்விங் ஆகும் என்பதால் கூடுதல் ப்ளஸ்" என்று மிஸ்ரா ஐடியா கொடுத்திருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
amit mishra suggested shardul thakur in wtc final - ஷர்துல்
Story first published: Saturday, June 19, 2021, 14:25 [IST]
Other articles published on Jun 19, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X