For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவின் 'வினோத' சாதனை!

By Staff

டெல்லி: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஹசிம் ஆம்லா, புதிய, வினோதமான சாதனையைப் படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லியை கலந்து செய்தது போன்று, கிரிக்கெட் உலகின், ரன் மெஷினாக வலம் வருகிறார், தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா.

Amla makes new record

ஒருதினப் போட்டிகளில், மிகக் குறைந்த போட்டிகளில், 2000 ரன்கள், 3000 ரன்கள், 4,000 ரன்கள், 5000 ரன்கள், 7000 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனை இவரிடம் தான் உள்ளது.

அதேபோல், மிக குறைந்த போட்டிகளில், அதிக சதமடிப்பதிலும் இவர் ஒவ்வொரு முறையும் சாதனை படித்து வருகிறார். தற்போது, 25 சதங்களுடன் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக, ஒருதினப் போட்டிகளில் சதமடைந்துள்ள, 4வது வீரராக உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, அவுட்டாவதில் புதிய வினோத சாதனையை அவர் படைத்துள்ளார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தின்போது, அவர் 137 ரன்கள் எடுத்து அவுட்டானார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டியில் வீழ்த்தப்படும் 70 ஆயிரம் விக்கெட் இதுவாகும். 2010ல் டெஸ்ட் கிரிக்கெட்டின் 60 ஆயிரமாவது விக்கெட்டாக அவுட்டானதும் ஆம்லாதான். இதைத்தவிர, கடந்த ஆண்டு டிசம்பரில், டெஸ்ட் போட்டியின் 10 ஆயிரமாவது எல்பிடபிள்யூ விக்கெட்டாக வீழ்ந்ததும் ஆம்லாதான்.

Story first published: Saturday, September 30, 2017, 17:35 [IST]
Other articles published on Sep 30, 2017
English summary
South African cricketer Hashim Amla in a new record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X