தெ. ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி தேர்வு எப்படி? ஒரு அலசல்..

மும்பை: இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. ஏன் ஆஸ்திரேலிய மண்ணில் வென்று இருக்கிறது

அவ்வளவு ஏன் மிகவும் கடினமான நியூசிலாந்து மண்ணிலும் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை.

அந்த அளவிற்கு பேட்டிங்கிற்கு கடினமான மைதானமாக தென்னாப்பிரிக்கா அமைந்துள்ளது. சச்சின், விராட் கோலியை தவிர மற்ற இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் திணறியே உள்ளனர்

தென்னாப்பிரிக்க டூருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ரகானே,புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு- முழு பட்டியல்தென்னாப்பிரிக்க டூருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ரகானே,புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு- முழு பட்டியல்

கடினம்

கடினம்

சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படும் டிராவிட்டின் சராசரியே தென்னாப்பிரிக்க மண்ணில் 29 தான். விவிஎஸ் லட்சுமணன் அங்கு ஒரு சதம் கூட அடித்தது இல்லை. தென்னாப்பிரிக்கா மண்ணில் நீங்கள் ரன் அடிக்க வேண்டும் என்றால் குறைந்தது நீங்கள் பத்தாயிரம் பந்துகளை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் தற்போது பார்மில் இல்லாத புஜாராவுக்கும், ரஹானேவிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் புஜாரா இதுவரை 13இன்னிங்சில் களமிறங்கி 411 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.ஆனால் ரஹானே தென்னாப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 6 இன்னிங்சில் விளையாடி 266 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 53 ஆகும். ஒரு வேலை இந்த காரணத்திற்காக அவர் அணியில் இடம்பெற்று இருக்கலாம்

மோசமான வரலாறு

மோசமான வரலாறு

இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஜோடி தென்னாப்பிரிக்கா தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் ரோகித்தின். சராசரி 15 ரன்கள் என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை மாற்றும் உத்வேகத்துடன் அவர் களமிறங்குகிறார்.கே.எல்.ராகுலின் சராசரி வெறும் 7 ரன்களே ஆகும். இந்த புள்ளி விவரத்தை மாற்றும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

பலம்

பலம்

ரிஷப் பண்ட் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் களமிறங்குவதால், அவருக்கும் முன் அனுப்வம் இல்லை. இதை தவிர தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் கலக்கிய விஹாரி அணியில் இடம்பெற்றாலும், அவருக்கு கண்டிப்பாக அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ் என சிறந்த வீரர்கள் உள்ளதால், அது கவலை இல்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India squad announced for SA Test series 2021. Pujaraand Rahane are having another chance in the Team. Talented Batsman Vihari Backs in side
Story first published: Wednesday, December 8, 2021, 21:54 [IST]
Other articles published on Dec 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X