For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயோ பாவம்.. ஆண்டர்சன்... எல்லா பில்டப்பும் வேஸ்ட் தானா?

லண்டன் : இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி இன்று தொடங்கவிருக்கிறது.

இப்போட்டிதொடர் ஆரம்பிக்கும் முன்னரே இது விராட் கோஹ்லிக்கும்,ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையிலான போட்டியாகவே கருதப்பட்டது. காரணம் விராட் கோஹ்லி கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது 10 இன்னிங்ஸ்களில் வெறும் 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மேலும் அத்தொடரில் ஆண்டர்சன் பந்துவீச்சில் நான்கு முறை தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

Anderson vs kohli battle going to an end at 5th test


அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து அவர் தற்போதைய இங்கிலாந்து தொடரில் ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் தற்போது நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஆவர்.

நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனால் ஒருமுறை கூட விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சன் இந்த தொடரில் விராட் கோஹ்லிக்கு இதுவரை 378 பந்துகளை வீசியுள்ளார். ஆண்டர்சனின் ஒவ்வொரு பந்தையும் விராட் கோஹ்லி கவனமாக கையாள்வது இதிலிருந்தே தெரிகிறது.

ஆண்டர்சனின் ஓவரில் முதலாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லிக்கு கேட்ச் வாய்ப்புகள் நழுவ விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது கடைசி வாய்ப்பில் ஆண்டர்சன் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்..!!





Story first published: Friday, September 7, 2018, 12:42 [IST]
Other articles published on Sep 7, 2018
English summary
Anderson vs kohli battle going to an end
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X