For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆண்டர்சன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - மெக்ராத்

இங்கிலாந்து : உலகின் தலை சிறந்த வேகபந்துவீச்சாளர்களில் ஒருவரான மெக்ராத் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

தற்போது அதனை முறியடிக்கும் வாய்ப்பு இங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு கிடைத்துள்ளது. அவர் 557 விக்கெட்களை எடுத்து மெக்ராத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளார். முதலிடத்தில் மெக்ராத் 563 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Anderson will surpass McGrath in fourth test

வரும் 30ஆம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மெக்ராத்தின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மெக்ராத் கூறுகையில்,எனது சாதனையை ஆண்டர்சன் முறியடித்த பிறகு அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று கூறினார். மேலும் அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற விஷயம் உண்மையில் எனக்கு பெருமையான ஒன்று.ஆனால் எந்த ஒரு சாதனையும் முறியடிக்கப்படும். ஜிம்மி எனது சாதனையை முறியடிப்பது எனக்கும் சமமான பெருமையே என்றும் கூறினார்.

ஆண்டர்சன் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் எனது சாதனையை முறியடித்த உடன் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பேன். அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆண்டர்சன் எனது சாதனையை முறியடித்த பின்னர் விரைவில் 600 விக்கெட்களை வீழ்த்துவார் என்றும் அவரால் அனில் கும்ப்ளேயின் 619 விக்கெட்கள் என்ற சாதனையையும் படைப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் வார்னேயின் 708 விக்கெட்கள் மற்றும் முரளிதரனின் 800 விக்கெட்கள் சாதனையை முறியடிப்பது சற்று கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

141 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 31065 பந்துகளை வீசி,அதிக பந்துகளை வீசிய வேகபந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

Story first published: Tuesday, August 28, 2018, 9:17 [IST]
Other articles published on Aug 28, 2018
English summary
No one will beat anderson record says McGrath
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X