For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெய்லுக்கு அப்புறம் சாதித்த காட்டடி மன்னன் ரசல்…! எல்லாரும் நினைச்ச அந்த சாதனையே தான்

கொல்கத்தா:நடப்பு ஐபிஎல் தொடரில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரசல்.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை போராடி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் பேட்டிங்கே இந்த தொடரின் சிறந்த ஒன்று என்று கூறலாம்.

1
45923

20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 232 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது கொல்கத்தா. கடைசி 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி.

உலகக்கோப்பை உட்பட.. அனைத்து அணிகளில் இருந்தும் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்.. இங்கிலாந்து அதிரடி!! உலகக்கோப்பை உட்பட.. அனைத்து அணிகளில் இருந்தும் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்.. இங்கிலாந்து அதிரடி!!

விளாசிய ரசல்

விளாசிய ரசல்

8 சிக்சர், 6 பவுண்டரிகளுயுடன் 40 பந்துகளில் 80 ரன்களை விளாசி அவுட் ஆகாமல் இருந்தார் காட்டடி மன்னன் ரசல். கடின இலக்கை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை தோற்றது.

பாண்டியா அரைசதம்

பாண்டியா அரைசதம்

9 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 91 ரன்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. 17 பந்துகளில் துரிதமாக 50 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல்லில் அதிவேக அரை சதம் என்ற பெருமையை பாண்டியா பெற்றார்.

50 சிக்சர்கள் சாதனை

50 சிக்சர்கள் சாதனை

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 50 சிக்சர்கள் அடித்து அசத்தி இருக்கிறார் ரசல். அதன்மூலம் ஐபிஎல்லில் ஒரு ஆண்டில் 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.

கெயலின் சிக்சர்கள்

கெயலின் சிக்சர்கள்

அதற்கு முன்பு கிறிஸ் கெயில் மட்டுமே இரண்டு ஆண்டுகள் தலா 50 சிக்சர்கள் விளாசி இருந்தார். இன்னும் போட்டிகள் இருப்பதால், காட்டடி மன்னன் ரசலின் சாதனைகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, April 29, 2019, 16:22 [IST]
Other articles published on Apr 29, 2019
English summary
Andre Russell 2nd player after Chris Gayle to hit 50 sixes in an IPL season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X