For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலையைத் தாக்கிய பவுன்ஸ்.. தடுமாறி விழுந்த ரஸல்.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ஆம்புலன்ஸ்.. என்னாச்சு?

அமீரகம்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், தலையில் பந்து பலமாக தாக்கியதால், ஆந்த்ரே ரஸல் மருத்துவமனை கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

ஐபிஎல்-லை போன்று, கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர், மீண்டும் அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் 2021ல் திடீர் திருப்பம்.. மே 2ம் தேதி போட்டியில்.. துணிகர சம்பவம் - பிசிசிஐ அதிர்ச்சிஐபிஎல் 2021ல் திடீர் திருப்பம்.. மே 2ம் தேதி போட்டியில்.. துணிகர சம்பவம் - பிசிசிஐ அதிர்ச்சி

இதில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடிய ரஸல் தலையில் பந்து தாக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலையில் விழுந்த அடி

தலையில் விழுந்த அடி

பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆட்டத்தில், சர்பராஸ் அகமது தலைமையிலான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும், ஷாதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த குவெட்டா அணி, 20 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்போது, 14வது ஓவரை, இஸ்லாமாபாத் அணியின் முகமது முஸா வீசினார். இதில், இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்ட ரஸல், அதே ஓவரில் வந்த பவுன்ஸ் பந்தை ஹெல்மெட்டில் வாங்கினார். பந்து வேகமாக தாக்கியதால், அவர் அங்கேயே நிலைத்தாடுமாறி விழுந்தார்.

ஆம்புலன்ஸ் மூலம்

ஆம்புலன்ஸ் மூலம்

எனினும், தொடர்ந்து பேட்டிங் செய்த ரஸல், உடனடியாக அவுட்டாகிச் சென்றுவிட்டார். பிறகு, இஸ்லாமாபாத் அணி பேட்டிங் செய்த போது, முதல் ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்த போதே, மீண்டும் ரஸல் நிலைத்தடுமாறினார். இதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. இதையடுத்து அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

10 ஓவரில்

10 ஓவரில்

எனினும், பயப்படும் அளவுக்கு பெரிதாக அந்த காயமும் ரஸலுக்கு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறிது நேரத்தில் அவர் பொறி கலங்கி கீழே விழுந்ததை பார்த்த அனைவரும் உண்மையில் பதைபதைத்துவிட்டனர். இறுதியில், இஸ்லாமாபாத் அணி எளிதாக வெற்றிப் பெற்றது. அதுவும் 10 ஓவரிலேயே.

36 பந்துகளில் 90

36 பந்துகளில் 90

தொடக்க வீரராக களமிறங்கிய நியூசிலாந்தின் காலின் மன்ரோ, 36 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். மறுபக்கம் உஸ்மான் கவாஜா 27 பந்துகளில் 41 ரன்கள் அடிக்க, 10 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றது. பவர்பிளேயான 6 ஓவர்களிலேயே அந்த அணி 97 ரன்கள் விளாசித் தள்ளிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Story first published: Saturday, June 12, 2021, 17:37 [IST]
Other articles published on Jun 12, 2021
English summary
Andre Russell hit by a bouncer in PSL match - ஆந்த்ரே ரஸல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X