For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயாகராவை விழுங்கிவிட்டு ரன் ஓட நான் பட்ட பாடு இருக்கே.. அய்யய்யய்யோ: பிளிண்டாப் பகீர் தகவல்

By Veera Kumar

லண்டன்: முந்தைய நாள் இரவு விழுங்கிய வயகரா மாத்திரையின் எஃபெக்ட் காரணமாக மறுநாள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட் ஆக வேண்டிய நிலை வந்ததாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ பிளிண்டாப் சுவாரசிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து கண்ட மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வர்ணிக்கப்படுபவர் பிளிண்டாப். குத்துச்சண்டைகளிலும் ஆர்வம் உள்ளவர். 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரின் நாயகனாக புகழப்படுபவர்.

சுயசரிதை

சுயசரிதை

கடந்த 2009ல் கிரிக்கெட்டில் இருந்து பிளிண்டாப் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் எழுதியுள்ள 2வது சுய சரிதை நூலான 'செகன்ட் இன்னிங்ஸ்' தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு சுவாரசியமான தகவலை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பிளிண்டாப் கூறியதாவது:

நீடித்து நின்றது

நீடித்து நின்றது

நான் படுக்கையறை விஷயத்தில் சற்று மந்தமாக இருப்பேன். இதனால், காதலியை மகிழ்விக்கலாம் என்று ஒரே நாளில் 3 வயாகரா மாத்திரைகளை விழுங்கினேன். இரவு முழுக்க நன்றாகவே உல்லாசமாக இருந்தோம். ஆனால், அதன் எஃபெக்ட் மறுநாள் வரை அப்படியே நீடித்து 'நிற்கும்' என்று எதிர்பார்க்கவில்லை.

செம வெயிட்

செம வெயிட்

அப்போது ஒரு டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்தது. நான் களமிறங்கி ஆடியபோது, என்னால், எழுச்சிக்கு நடுவே ரன் ஓட முடியவில்லை. பெரும் 'சுமையாக' உணர்ந்தேன். இதனால் அநியாயமாக ரன் அவுட் ஆனேன்.

மனச்சோர்வு

மனச்சோர்வு

நான் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது அறிவுரை கூறிய டேவிட் லாய்டு, மைதானத்திற்குள் இறங்கும்போது, ஹெல்மெட் அணியாமல், திறந்த முகத்தோடு செல்லுமாறும், அப்படி செல்லும்போது, மைதானமே உன்னுடைய சொத்து என நினைத்துக்கொண்டு ஒரு உரிமையாளரை போல செல்ல வேண்டும் என்றும் டிப்ஸ் கொடுத்தார்.

ஒரே பயமயம்

ஒரே பயமயம்

இதன்பிறகு பல போட்டிகளில் நான் ஹெல்மெட் அணியாமல் முகத்தை அதிகார தோரணையாக வைத்துக்கொண்டுதான் செல்வேன். ஆனால் வெளியில்தான் அந்த நடிப்பெல்லாம். உள்ளுக்குள் நான் பயந்தவனாகவே இருந்தேன். இவ்வாறு பிளிண்டாப் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2015, 16:44 [IST]
Other articles published on Oct 14, 2015
English summary
Andrew Flintoff revealing how he was once run out while batting with a boner, thanks to the effects of Viagra.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X