For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஷஸ் தோல்விக்கு பீட்டர்சன் பலிகடாவா...?: பிளிண்டாப் 'ஃபீலிங்ஸ்'!

லண்டன்: ஆஷஸ் கிரிக்கெட் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் பலிகடா ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வீரரான பிளிண்டாப்.

சமீபத்தில் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது அங்கு விவாதங்களை எழுப்பியுள்ளது. பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் வீரர் பிளிண்டாப், பீட்டர்சன் நீக்கத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஷஷ் படு தோல்வி

ஆஷஷ் படு தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

பீட்டர்சனுக்கு ஆப்பு

பீட்டர்சனுக்கு ஆப்பு

அதனைத் தொடர்ந்து, அணியை வலுப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் நிரந்தரமாக நீக்கப் பட்டுள்ளார்.

பலிகடாவா..

பலிகடாவா..

இந்நிலையில், பீட்டர்சன் நீக்கம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் பிளிண்டாப். அதில், ஆஷஸ் தோல்விக்கு பீட்டர்சன் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தப்பான முடிவு

தப்பான முடிவு

மேலும், இதுபோன்ற முடிவுகள் தவறானது என்றும், தனிப்பட்ட வீரர் மீது இதுபோன்று நடவடிக்கை எடுப்பது அணியின் உத்வேகத்தை சிதைத்து விடும் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 10, 2014, 10:32 [IST]
Other articles published on Feb 10, 2014
English summary
Former England all-rounder Andrew Flintoff believes that Kevin Pietersen has been made a scapegoat for England's Ashes whitewash after having his international career brought to an end.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X