For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் இந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்.. ஜாம்பவானின் பெருமையை கூறும் 5 விஷயங்கள்.. கிரிக்கெட்டர்களின் உத்வேகம்!

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணத்தால் உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Recommended Video

ஆஸி. Ex.கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்: கார் விபத்தில் பலியான சோகம்!

ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் ரசிகர்கள் நீங்காத சூழலில் தற்போது மற்றொரு சோக செய்தி வந்துள்ளது.

46 வயதே ஆகும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், காரில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதிர்ச்சி.. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி! அதிர்ச்சி.. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி!

என்ன நடந்தது

என்ன நடந்தது

டவுன்ஸ்வில் என்ற நகரத்தில் இருந்து இன்று ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைக்கு வெளியே சென்று விபத்துக்குள்ளானது. இதில் உடனடியாக சைமண்ட்ஸின் உயிர் பிரிந்தது. உலக கிரிக்கெட்டையே கலக்கிய இந்த ஜாம்பவானின் சாதனைகளை பார்க்கலாம்.

நட்சத்திர ஆல்ரவுண்டர்

நட்சத்திர ஆல்ரவுண்டர்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களுக்கு மேல் ( 5,088) அடித்தும், 100 (133 விக்கெட்டுகள் ) விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய வீரர்கள் ஒரு சிலரே உள்ளனர். அதில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் ஒருவர் ஆவார். 1998 முதல் 2009ம் வரை 11 ஆண்டுகளாக இவர் 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார்.

5 ஆண்டு தவிப்பு

5 ஆண்டு தவிப்பு

5 ஆண்டுகளாக நிலையான ஃபார்மில் இல்லாமல் விமர்சனங்களில் சிக்கிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கு 2003ம் ஆண்டு உலகக்கோப்பையில் வாய்ப்பு தந்து அதிர்ச்சி தந்தது ஆஸ்திரேலியா. எனினும் அதில் பாகிஸ்தானுக்கு எதிராக 126 பந்துகளில் 143 ரன்களை விளாசி அசத்தினார். அவரின் தலைசிறந்த கம்பேக் இன்று வரை பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளது. 2003ம் ஆண்டு 2007ம் ஆண்டு என உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார்.

உலகின் தலைசிறந்த ODI ப்ளேயிங் 11ஐ ஐசிசி தேர்வு செய்யும். இதில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 2005, 2006 மற்றும் 2008ம் ஆண்டுகளில் இடம்பெற்று அசத்தியுள்ளார். உலகின் பல முன்னணி ஜாம்பவான்களுக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

20 ஆண்டுகள் சாதனை

20 ஆண்டுகள் சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னரே பிரமாண்ட சாதனையை படைத்தார். அதாவது 1995ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 254 ரன்களை விளாசினார். இதில் 16 சிக்ஸர்கள் அடங்கும். ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையை ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் வைத்திருந்தார். அதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 2015ம் ஆண்டு நியூசிலாந்து 23 சிக்ஸர்களை அடித்து முறியடித்தார்.

ஐபிஎல் மதிப்புமிக்க வீரர்

ஐபிஎல் மதிப்புமிக்க வீரர்

இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரில் முதல் அதிக மதிப்புமிக்க அயல்நாட்டு வீரர் அண்ட்ரூ சைமண்ட்ஸ் தான். 2008ம் ஆண்டு தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி சார்பில் 1.35 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டார். அதன்பின்னர் 2009ம் ஆண்டு டெக்கான் அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். 2011ம் ஆண்டு கடைசியாக மும்பை அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 15, 2022, 13:57 [IST]
Other articles published on May 15, 2022
English summary
Andrew Symonds records and acheivements ( ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனைகள் ) ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் பெருமையை சொல்லும் 5 சாதனைகளை பார்க்கலாம்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X