For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா? கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்

டெல்லி : இந்திய அணியின் துவக்க வீரராக ஆடிய கௌதம் கம்பீர் சென்ற வாரம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

அதையடுத்து தான் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த கேப்டன் யார் என்பது குறித்து கூறினார்.

கம்பீர் பெரும்பாலான போட்டிகளை கங்குலி மற்றும் தோனி தலைமையில் தான் ஆடினார்.

இவர்கள் யாருமே இல்லை!

இவர்கள் யாருமே இல்லை!

அவர்கள் இருவரில் யார் கம்பீருக்கு பிடித்த கேப்டன். கங்குலி, தோனி இருவருமே கம்பீரின் லிஸ்டில் இல்லை. சரி, ஒருவேளை ராகுல் டிராவிடாக இருக்குமோ? அவரும் இல்லையாம்! கம்பீர் வேறு ஒரு கேப்டனை சிறந்த "தலைவர்" என கூறியுள்ளார். அவர் யார் தெரியுமா?

அனில் கும்ப்ளே தான்

அனில் கும்ப்ளே தான்

ராகுல் டிராவிடிற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியை வகித்தவர் அனில் கும்ப்ளே. அவர் தான் தனக்கு பிடித்த கேப்டன் எனக் கூறி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கம்பீர். அனில் கும்ப்ளே சில காலம் மட்டுமே இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் கும்ப்ளே

தலைவர் கும்ப்ளே

"ஒரு கேப்டன் என்பவருக்கும், தலைவர் என்பவருக்கும் வித்தியாசம் உள்ளது. என் கிரிக்கெட் வாழ்வில் நிறைய கேப்டன்களுக்கு கீழ் நான் ஆடி இருக்கிறேன். சுயநலம் இல்லாத, மிக நேர்மையான ஒருவர் இருக்கிறார். நான் நிறைய கேப்டன்களுக்கு கீழே ஆடி இருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு தலைவருக்கு கீழே தான் விளையாடினேன். அது அனில் கும்ப்ளே தான்" என பெருமையாக குறிப்பிட்டார் கம்பீர்.

ஐந்து டெஸ்ட் போட்டிகள்

ஐந்து டெஸ்ட் போட்டிகள்

அனில் கும்ப்ளே தலைமையில் கம்பீர் வெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீர் மற்றும் தோனி இடையே மனக்கசப்பு இருந்ததாக பல கதைகள் உண்டு. இந்த நிலையில், கம்பீர் தோனி மற்றும் கங்குலியை தாண்டி அனில் கும்ப்ளேவை தனக்கு பிடித்த "தலைவர்" என குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, December 10, 2018, 18:21 [IST]
Other articles published on Dec 10, 2018
English summary
Anil kumble is the best captain says Gambhir. Though, he played under Ganguly and Dhoni for long time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X