For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு இடமில்லை.. என்ன அனில் கும்ப்ளே இப்படி பண்ணிட்டாரு!

மும்பை : 2019 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் மே மாத இறுதி முதல் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை உலகக்கோப்பைக்கு தேர்வாகும் அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதில் பலத்த குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் அனில் கும்பளே தன் பார்வையில் இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அனில் கும்ப்ளேவின் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார்?

கும்ப்ளேவின் அணி

கும்ப்ளேவின் அணி

அனில் கும்ப்ளேவின் அணியில் உள்ள முதல் 11 வீரர்கள் - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.

தோனி எந்த இடம்?

தோனி எந்த இடம்?

பேட்டிங் வரிசையில் கும்ப்ளே தனது அணியை கூறியுள்ளார். இதன்படி பார்த்தால், தோனியை நான்காம் இடத்தில் இறங்க வேண்டும் என கூறுகிறார் அனில் கும்ப்ளே. இதன் மூலம் அனுபவ பேட்ஸ்மேன்கள் ரோஹித், தவான், கோலி, தோனி ஆகிய நால்வரும் முதல் நான்கு இடங்களுக்குள் ஆடுவார்கள்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டரில் கேதார் ஜாதவ் மற்றும் ஹர்திக் பண்டியா, புவனேஸ்வர் குமார் மட்டுமே உள்ளனர். இவர்களில் பண்டியா அதிரடி வீரர், புவனேஸ்வர் குமார் பேட்டிங்கில் அதிக அனுபவமற்றவர் என்பதால் ஜாதவ் மட்டுமே அணியின் கடைசி முழு பேட்ஸ்மேனாக இருப்பார்.

விஜய் ஷங்கர்?

விஜய் ஷங்கர்?

இவர்கள் தவிர்த்து மாற்று வீரர்களாக நான்கு வீரர்களை கூறியுள்ளார். மாற்று ஆல்-ரவுண்டர் இடத்திற்கு விஜய் ஷங்கர் அல்லது ஜடேஜாவை தேர்வு செய்யலாம் என கூறியுள்ளார். விஜய் ஷங்கர் பேட்ஸ்மேன் என்ற வகையிலேயே நாம் எடுத்துக் கொள்ள முடியும். அவரால் 10 ஓவர்கள் பந்து வீச முடியுமா என்பது சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பதி ராயுடுவுக்கு இடம்

அம்பதி ராயுடுவுக்கு இடம்

மிடில் ஆர்டரில் மாற்று வீரராக அம்பதி ராயுடுவை தேர்வு செய்துள்ளார் கும்ப்ளே. மாற்று துவக்க வீரராக ரிஷப் பண்ட் மற்றும் நான்காவது வேகப் பந்துவீச்சாளராக கலீல் அஹ்மது ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ராகுல், தினேஷ் இல்லை

ராகுல், தினேஷ் இல்லை

அனில் கும்ப்ளேவின் அணியில் கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு இருக்கின்றனர். அது போல விஜய் ஷங்கருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சுழற் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் - சாஹல் கூட்டணியை கும்ப்ளே தேர்வு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 16, 2019, 18:14 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
Anil Kumble revealed his World Cup XI - KL Rahul, Dinesh Karthik dropped out.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X