For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி ஒரு நிலையா இல்லையே! தோனியை பேசாம 4வது இடத்தில் இறக்குங்க.. அனில் கும்ப்ளே அறிவுரை!

Recommended Video

Anil Kumble on Indian team | இந்திய அணி ஒரு நிலையா இல்லையே: அனில் கும்ப்ளே அறிவுரை!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான அனில் கும்ப்ளே தோனி பேட்டிங் இறங்கும் இடம் குறித்து தன் கருத்தை தெரிவித்தார்.

இந்திய அணி உலகக்கோப்பை ம்முன் கடைசியாக நடைபெற்ற சர்வதேச தொடரான ஆஸ்திரேலிய தொடரில் 2-3 என தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி நிலையாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

3 பந்துகளில் 10 ரன்கள்.. 2 சிக்சர்களால் ராபின்சிங்கை தெறிக்கவிட்ட குருணல் பாண்டியா! வைரல் வீடியோ 3 பந்துகளில் 10 ரன்கள்.. 2 சிக்சர்களால் ராபின்சிங்கை தெறிக்கவிட்ட குருணல் பாண்டியா! வைரல் வீடியோ

ஏராளமான வீரர்கள்

ஏராளமான வீரர்கள்

இந்நிலையில், இந்திய அணியில் நான்காவது இடத்தில் எந்த வீரரை இறக்கி ஆட வைப்பது என்ற குழப்பம் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, யுவராஜ் சிங், அஜின்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர் என ஏராளமான வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது.

சரியான வீரர்

சரியான வீரர்

எந்த வீரரும் 4வது இடத்தில் களமிறங்கி ஆடியதில் கேப்டன் கோலிக்கு திருப்தி ஏற்படவில்லை. இந்நிலையில், அனில் கும்ப்ளே, தோனி தான் அந்த இடத்திற்கு சரியான வீரர் என கூறியுள்ளார்.

வெற்றிக்கு காரணம் யார்?

வெற்றிக்கு காரணம் யார்?

இது பற்றி கூறுகையில், "கடந்த இரு ஆண்டுகளில் இந்திய அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தது முதல் மூன்று பேட்ஸ்மேன்களே. இப்போதும் அப்படி தான் உள்ளது" என்றார் அனில் கும்ப்ளே.

4வது இடத்தில் தோனி

4வது இடத்தில் தோனி

மேலும், "தோனி 4வது இடத்தில் தான் ஆட வேண்டும். 5,6 மற்றும் 7வது இடத்திற்கு தான் யார் ஆட வேண்டும் என நாம் பார்க்க வேண்டும். ஆனால், அந்த இடங்களுக்கு தான் கடந்த காலங்களில் மிக அதிக அளவில் வீரர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு உள்ளனர். தோனி தவிர எந்த வீரர் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் எனவும் பார்க்கப்பட்டுள்ளது. இதனால், வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு அணி இன்னும் நிலையாக இல்லை என்பது போல் தான் உள்ளது" எனக் கூறினார்.

ஏன் நான்காவது இடத்தில்?

ஏன் நான்காவது இடத்தில்?

மேலும், தோனியை ஏன் நான்காவது இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்பது குறித்தும் அனில் கும்ப்ளே கூறினார். முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் தான் 70-80% போட்டிகளை வென்று கொடுப்பார்கள். அதனால் தான் நான் தோனியை நான்காவது இடத்தில் ஆட வைக்க வேண்டும் என கூறுகிறேன் என்றார் கும்ப்ளே.

தொடர்ந்த மாற்றங்கள்

தொடர்ந்த மாற்றங்கள்

அனில் கும்ப்ளே கூறுவது போல இந்திய அணி முதல் மூன்று இடங்களை தவிர்த்து எந்த இடத்திற்கும் நிலையான வீரர்களை வைத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்த மாற்றங்களால் தான் அணி சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது.

தோனி பார்ம்

தோனி பார்ம்

தோனி கடந்த 2018ஆம் ஆண்டு மிக மோசமான பார்மில் இருந்தார். எனினும், இந்த ஆண்டு 8 இன்னிங்க்ஸ்களில் 327 ரன்கள் குவித்து அட்டகாசமான பார்மில் உள்ளார். இந்த ஆண்டு அவரது சாராசரி 81.75 என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 15, 2019, 16:09 [IST]
Other articles published on Mar 15, 2019
English summary
Anil Kumble says Dhoni should bat at no.4 position
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X