இந்திய அணியின் கோச் பதவியை விட்டு வெளியேறியதில் மகிழ்ச்சி - அனில் கும்ப்ளே

மும்பை : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்ட போது அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

What Ganguly told about Dhoni before his debut?

இந்திய அணி திறமையான, பாதுகாப்பான ஒருவரிடம் பட்டை தீட்டப்பட உள்ளது என மகிழ்ச்சி அடைந்தனர்.

பல தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவும் செயல்பட்டது. சில தொடர்களில் சறுக்கியது.

தோனியை டீமில் எடுத்த உடன்.. கங்குலி பெருமையாக சொன்ன அந்த வார்த்தை.. வெளியான தகவல்!

2017 சாம்பியன்ஸ் ட்ராபி

2017 சாம்பியன்ஸ் ட்ராபி

2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், பாகிஸ்தான் அணியிடம் இறுதிப் போட்டியில் படுதோல்வி அடைந்தது. அந்த தோல்வி இந்திய ரசிகர்களை பெரிய அளவில் பாதித்தது.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

அந்த தோல்வியை காட்டிலும் பெரிய அதிர்ச்சி தொடர்ந்து வெளி வந்தது. கேப்டன் விராட் கோலி - பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகவும், பல நாட்களாக நீடித்த அது இறுதியில் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதியில் வெடித்ததாகவும் கூறப்பட்டது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அந்த தொடரின் முடிவில் விராட் கோலியின் அழுத்தத்தால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விராட் கோலி மீது கடும் விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனதும் விமர்சிக்கப்பட்டது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பயிற்சியாளர் பதவியில் இருந்தது, விலகியது பற்றி ஒரு பேட்டியில் சமீபத்தில் பேசினார் அனில் கும்ப்ளே. அப்போது, "இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை பெற்றது மகிழ்ச்சி அளித்தது. இந்திய அணியுடன் செலவிட்ட அந்த ஓராண்டு சிறப்பானது" என்றார்.

எந்த வருத்தங்களும் இல்லை

எந்த வருத்தங்களும் இல்லை

மேலும், "இந்திய அணியில் பெரிய வீரர்களுடன் இருந்து விட்டு, பின் மீண்டும் இந்திய அணியுடன் இருந்தது சிறப்பான உணர்வு. அந்த ஒரு வருடம் நாங்கள் நன்றாக செயல்பட்டோம். நான் சில விஷயங்களில் என் பங்களிப்பை அளித்தேன். எந்த வருத்தங்களும் இல்லை" என்றார் கும்ப்ளே.

வெளியேறியதில் மகிழ்ச்சியே

வெளியேறியதில் மகிழ்ச்சியே

"நான் அங்கே இருந்து வெளியேறியதில் மகிழ்ச்சியே. முடிவு சிறப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், அது பரவாயில்லை. ஒரு பயிற்சியாளராக விலகும் நேரம் வந்தால், பயிற்சியாளர் தான் விலக வேண்டும் என தெரிந்து கொண்டேன். அந்த ஓராண்டில் நான் முக்கியமானவனாக பணியாற்றியதில் மகிழ்ச்சிதான்" என்றார் கும்ப்ளே.

மீண்டும் பயிற்சியாளர்

மீண்டும் பயிற்சியாளர்

2017இல் அனில் கும்ப்ளே இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் வர்ணனையாளர், ஐசிசி குழு ஒன்றில் உயர் பதவி என பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். 2020 ஐபிஎல் தொடர் முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Anil Kumble says he was happy moving from Indian team coaching.
Story first published: Wednesday, July 22, 2020, 18:39 [IST]
Other articles published on Jul 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X