இந்த வீரரை 4வதாக பேட்டிங் இறக்குங்க.. இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே அட்வைஸ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 4வதாக விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியா -மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய சர்வதேச டி20 தொடரில் 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கோப்பையை இந்தியாவிடம் அந்த அணி தவறவிட்டது.

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்கு மேற்கிந்திய தீவுகள் அணி சவாலாக இருக்கும் என்றும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

 சிறந்த பயிற்சியாளர்

சிறந்த பயிற்சியாளர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை புரிந்தவர்.

"4வதாக களமிறங்க வேண்டும்"

சிறந்த பயிற்சியாளராகவும் செயல்பட்டுவரும் அனில் கும்ப்ளே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி மோதவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் திறமையான ஸ்ரேயாஸ் ஐயர் 4வதாக களமிறங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

 அனில் கும்ப்ளே ஆலோசனை

அனில் கும்ப்ளே ஆலோசனை

இந்தியாவுடன் சர்வதேச டி20 போட்டித் தொடரில் விளையாடி தொடரை இழந்த மேற்கிந்திய அணியினர், ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருப்பார்கள் என்றும் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

 அனில் கும்ப்ளே கருத்து

அனில் கும்ப்ளே கருத்து

மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை கொடுப்பார்கள் என்ற தெரிவித்த அனில் கும்ப்ளே, இந்திய பௌலர்கள் சிறப்பான பந்துவீச்சை அளித்தால் மட்டுமே அவர்களை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் முதல் போட்டி

சென்னையில் முதல் போட்டி

சர்வதேச டி20 தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளின் முதல் ஆட்டம் வரும் 16ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இதை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Shreyas Iyer should bat at 4th number against West Indies ODIs - Kumble says
Story first published: Friday, December 13, 2019, 18:44 [IST]
Other articles published on Dec 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X