For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடி மேல அடி... தொடர் கலக்கத்தில் சிஎஸ்கே... டுவைன் பிராவோவும் அவுட்... மீள வழிதெரியாத தல!

துபாய் : சோதனை மேல் சோதனையாக சிஎஸ்கேவின் டுவைன் பிராவோவும் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது தொடரிலிருந்தே வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் அவர் யூஏஇயில் இருந்து புறப்பட்டு விடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என மூத்த வீரர்களின் விலகலை அடுத்து தடுமாற்றத்தை சந்தித்துவரும் சிஎஸ்கேவிற்கு தற்போது இது மேலும் அடி கொடுத்துள்ளது.

அடி மேல் அடி

அடி மேல் அடி

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே சிஎஸ்கே கடுமையான நெருக்கடிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அந்த அணியின் வீரர்களுக்கு கொரோனா பாதித்தது, தொடர்ந்து சொந்த காரணங்களால் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியிலிருந்து விலகியது என்று அடி மேல் அடி கிடைத்து வருகிறது.

டுவைன் பிராவோ விலகல்

டுவைன் பிராவோ விலகல்

இந்நிலையில் கடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடுப்பில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய டுவைன் பிராவோ, தற்போது காயம் அதிகமானதையடுத்து தொடரிலிருந்தே வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சொந்த நாட்டிற்கு பயணம்

சொந்த நாட்டிற்கு பயணம்

இந்த சீசனில் இனிவரும் போட்டிகளில் டுவைன் பிராவோ பங்கேற்க மாட்டார் என்று தெரிவித்துள்ள விஸ்வநாதன், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் யூஏஇயில் இருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு புறப்பட்டு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேதார் ஜாதவின் சொதப்பல் ஆட்டம்

கேதார் ஜாதவின் சொதப்பல் ஆட்டம்

சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங்கிற்கு மாற்றாக கெண்டுவரப்பட்ட கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா மற்றும் கரன் சர்மா ஆகியோர் இந்த சீசனில் சோபிக்கவில்லை. கேதார் ஜாதவின் ஆட்டங்கள் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. ரவீந்திர ஜடேஜாவும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை தரத் தவறியுள்ளார்.

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

இந்நிலையில், டுவைன் பிராவோவின் விலகலும் அணிக்கு பெரும் நெருக்கடியை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருக்கு பதிலாக கடந்த ஆண்டின் பர்ப்பிள் கேப் வெற்றியாளா இம்ரான் தஹிர் அணியில் இடம்பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. இனிவரும் 4 போட்டிகளில் சிஎஸ்கேவின் வெற்றியை இந்த வீரர்கள் தீர்மானிப்பார்கள்.

Story first published: Wednesday, October 21, 2020, 14:33 [IST]
Other articles published on Oct 21, 2020
English summary
With Bravo ruled out, CSK is likely to finally bring last year's purple cap winner Imran Tahir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X