For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனா வேணாம்.. மாறும் மனநிலை.. பாதிக்கும் வருமானம்.. சிக்கலில் ஊடகங்கள்!

மும்பை : சீனாவுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்திய அரசு 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த மாற்றம் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களை எந்த வகையில் பாதிக்கும் என "தி வால்ட் டிஸ்னி கம்பெனி (ஆசிய பசிபிக்)" தலைவரும், ஸ்டார் மற்றும் டிஸ்னி இந்தியா தலைவரும் ஆன உதய் சங்கர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

சீனாவுக்கு எதிரான மனநிலை நம் நாட்டில் நீடித்தால் தொலைக்காட்சிகள் வேறு வகையான வருவாய் வாய்ப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

இந்தியா - சீனா எல்லை மோதல்.. வலுக்கும் எதிர்ப்பு.. அந்த சீன கம்பெனியை விட்டு விலகப் போகும் ஐபிஎல்!இந்தியா - சீனா எல்லை மோதல்.. வலுக்கும் எதிர்ப்பு.. அந்த சீன கம்பெனியை விட்டு விலகப் போகும் ஐபிஎல்!

பொருளாதாரம்

பொருளாதாரம்

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் பலர் வேலை இழந்துள்ளனர். பலருக்கு சம்பள குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், விளம்பரங்கள் குறைந்து ஊடகங்கள் நிதிச் சிக்கலில் உள்ளன.

மனநிலை

மனநிலை

தொலைக்காட்சிகளும் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் மோதல் நிகழ்ந்து, பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மக்கள் மத்தியில் சீன நிறுவனங்கள், பொருட்களுக்கு எதிரான மனநிலை உருவாகி வருகிறது.

ஆப்கள் தடை

ஆப்கள் தடை

மத்திய அரசு சமீபத்தில் 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்தது. அதன் மூலம், அரசும் சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலையில் இருக்கலாம் என வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது பற்றி, ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ள ஸ்டார் குழுமத்தின் தலைவர் உதய் சங்கர் பேட்டி அளித்தார்.

பிரச்சனைகளின் கலவை

பிரச்சனைகளின் கலவை

அவர் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸ் மற்றும் சீன விவகாரம் ஏற்பட்டுள்ளது ஒரே நேரத்தில் பல எதிர்பாராத பிரச்சனைகளின் கலவை என கூறி உள்ளார். இந்த நேரத்தில் எதையும் பகுத்தறிவுடன் பார்க்க முடியாது, இது முற்றிலும் எதிர்பாராதது என்றார்.

வருவாய் மாதிரி

வருவாய் மாதிரி

மேலும், சீன பொருட்கள், நிறுவனங்கள் மீதான எதிர்ப்பால் ஐபிஎல் தொடருக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பேசுகையில், ஒரு எக்ஸ் அல்லது ஒய் கம்பெனி, தேசிய அல்லது சமூக ஆர்வம் காரணமாக இல்லாமல் போனால், நாங்கள் வேறு வகையான வருவாய் மாதிரியை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

நுகர்வோர் மீது நம்பிக்கை

நுகர்வோர் மீது நம்பிக்கை

ஐபிஎல் தொடரை 2017இல் ஐந்து ஆண்டு காலத்துக்கு ஒளிபரப்ப 16,347.50 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஸ்டார் குழுமம் பெற்று இருந்தது. கிரிக்கெட்டுக்கு ஒரு சக்தி உள்ளது என்றும், அந்த சக்தி இந்திய நுகர்வோரை அதிக ஆழமாக செயல்பட வைக்கும். மக்களுக்கு ஒரு விஷயத்தை அதிக விருப்பத்துடன் பிடித்து இருந்தால், அவர்கள் அதை வருமான ரீதியில் ஆதரிப்பார்கள் என்றார்.

ஐபிஎல் எப்போது நடக்கும்?

ஐபிஎல் எப்போது நடக்கும்?

ஐபிஎல் தொடர் கால வரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஐபிஎல் தொடர் எப்போது நடக்கும் என்பது பற்றி அவர் பேசுகையில், நாங்கள் எங்களுக்குள் இது பற்றி விவாதித்து, திட்டமிட்டு வருகிறோம். சூழல் பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில் நாங்கள் இந்த தொடரை நடத்த விரும்பவில்லை என்றார்.

Story first published: Wednesday, July 1, 2020, 11:06 [IST]
Other articles published on Jul 1, 2020
English summary
Anti - China mindset affects income for media outlets. How could IPL take this situation, explains Uday Shankar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X