For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காஷ்மீரில் தோனிக்கு எதிரான முழக்கமிட்ட மக்கள்..? வெளியானது பாக். விஷமத்தனம்.. உண்மை இதுதான்..!

காஷ்மீர்: ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள தோனிக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கோஷமிடப்பட்டதாக பாகிஸ்தான் மீடியா வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலக கோப்பை தொடருக்கு பின் தோனி 2 மாதங்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தோனி தெரிவித்தார். அதன்படி தற்போது அவர் காஷ்மீரில் தீவிர ராணுவ ரோந்து பயிற்சியில் உள்ளார்.

ஆதரவு, எதிர்ப்பு

ஆதரவு, எதிர்ப்பு

காஷ்மீரை 2 ஆக பிரித்து ஜம்மு , காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக இந்திய அரசு அறிவித்தது. அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது.

அப்ரிடி கண்டனம்

அப்ரிடி கண்டனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி, இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்தை பறித்தது தவறு என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

அப்ரிடி முழக்கம்

அப்ரிடி முழக்கம்

இந்நிலையில், தோனி காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதிக்கு சென்ற போது அங்கிருந்த மக்கள் பூம் பூம் அப்ரிடி என எதிர்ப்பு முழக்கமிட்டதாக செய்திகள் பரவின. பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட அந்த வீடியோவை நெட்டிசன்கள் விடவில்லை.

உண்மை என்ன?

இஷ்டத்துக்கு பலர் அந்த வீடியோவை வைராலாக்கி தங்கள் ஆசையை தீர்த்துக் கொண்டனர். ஆனால் அந்த உண்மை தன்மை என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளி வந்திருக்கிறது. அந்த வீடியோ பாகிஸ்தான் ஊடகத்தால் 2017ம்ஆண்டு வெளியிடப்பட்டது.

ஊடக செய்தி

2017ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் ஜம்மு, காஷ்மீரில் நடத்திய கிரிக்கெட் போட்டிக்கு மகேந்திர சிங் தோனியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அப்போது ரசிகர்கள் பூம் பூம் அப்ரிடி என முழக்கமிட்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி ஒளிபரப்பியது.

விஷமிகளின் கைவரிசை

விஷமிகளின் கைவரிசை

காஷ்மீரில் தற்போது குழப்பமான சூழ்நிலை உருவாகி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. தோனியும் காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த தருணத்தில் இரண்டையும் இணைத்து சில விஷமிகள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால், அந்த வீடியோ தற்போது நடைபெற்றது கிடையாது என்பது தான்.

Story first published: Sunday, August 11, 2019, 16:10 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
Anti slogan against dhoni is fake, the truth comes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X