For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி..!! இனி பார்க்க தான் போறீங்க.. தரமான சம்பவத்தை..!! ரஜினி வசனம் பேசி மிரட்டிய இங்கிலாந்து வீரர்

Recommended Video

Ashes 2019 | Ben stokes on Archer | ஆர்ச்சர் பந்துவீச்சு பற்றி ஸ்டோக்ஸ் அதிரடி கருத்து- வீடியோ

லண்டன்: இனிமே பவுன்சர்களை தான் அதிகளவு ஆர்ச்சர் வீசுவார் என்று இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கூறி, ஆஸி.யை அதிர வைத்திருக்கிறார்.

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகமாகினார். களமிறங்கிய முதல் போட்டி தான் என்றாலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மணிக்கு 95 மைல் வேகத்தில் ஆர்ச்சர் வீசி பந்துகள் ஆஸ்திரேலியாவை கதிகலங்கச் செய்தது.

குறிப்பாக 4வது நாளில் ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் ஸ்மித் கழுத்து பகுதியில் அடி வாங்கி சுருண்டு விழுந்தார். அவருக்கு பதிலாக மாற்றுவீரராக களமிறக்கப்பட்ட லாபுசாங்கேக்கும் ஒரு பவுன்சரை போட்டு தாக்கினார் ஆர்ச்சர்.

ஓய்வுக்கு வாய்ப்பு?

ஓய்வுக்கு வாய்ப்பு?

இந்நிலையில், வரும் வியாழன்று ஹெடிங்கிலியில் 3வது டெஸ்ட் தொடங்குகிறது. இதில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியிருப்பதாவது:

களத்தில் நிற்க முடியாது

களத்தில் நிற்க முடியாது

ஆர்ச்சரின் பந்துவீச்சிலும், பவுன்சரிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பார்த்தது ஒரு பகுதிதான். இன்னும் ஆக்ரோஷமாக, ஆவேசமாக பவுன்சர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பார்க்க வேண்டி இருக்கிறது. யாரும் களத்தில் நிலைத்து நின்று ஆட முடியாது.

விமர்சனத்துக்கு பதில்

விமர்சனத்துக்கு பதில்

ஆர்ச்சரின் பந்துவீச்சு குறித்து விமர்சனம் வருகிறது. ஆனால், பந்துவீச்சில் சில பேட்ஸ்மேன்கள் மோசமாக அடி வாங்கினார்கள் என்பதற்காக, எந்த பவுலரும் இனி பந்துவீசுவதில்லை, யாரும் அடி வாங்க பந்துவீசவில்லை என்று கூற மாட்டார்கள்.

பவுன்சர் வீச வேண்டும்

பவுன்சர் வீச வேண்டும்

பந்துவீச்சில் ஒரு பேட்ஸ்மேனுக்கு அடிபட்டது என்றால் பவுலருக்கு கவலை இருக்கும். ஆனால் அடிபட்ட பேட்ஸ்மேன் மீண்டும் அடுத்த பந்தை எதிர் கொண்டால் அப்போதும் பவுன்சர் வீசத்தான் வேண்டும்.

புதிய பரிணாமம்

புதிய பரிணாமம்

எங்களின் பந்துவீச்சு தாக்குதலில் மற்றொரு பரிமாணத்தை ஆர்ச்சர் வெளிப் படுத்துகிறார். நான் கிரிக்கெட் விளையாட வந்ததில் இருந்து இதுபோன்ற பந்து வீச்சை பார்த்தது இல்லை. ஆஸ்திரேலியாவின் ஜான்சன் இதுபோன்று பவுலிங் வீசுவதை பார்த்திருக்கிறோம்.

வானமே எல்லை

வானமே எல்லை

அதே ஆவேசமான பந்துவீச்சை ஆர்ச்சர் இப்போது வீசுகிறார். அவரிடம் இருப்பது அசாத்தியமான, மிரட்டும் விதமான திறமை. ஆர்ச்சரின் திறமைக்கு வானம்தான் எல்லை என்றார்.

Story first published: Tuesday, August 20, 2019, 19:09 [IST]
Other articles published on Aug 20, 2019
English summary
Archer again bowl bouncer in ashes series says england all rounder ben stokes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X