For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேறு வேலைக்கு தான் போகணுமா...? ஐசிசியால் உருகிய முக்கிய வீரர்

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு ஐசிசி தடை விதித்ததால், அந்நாட்டு வீரர்கள் அனைவரும் விரக்தியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு ஐசிசி தடை விதித்தது. அதனால் ஐசிசி தொடர்களில் அந்த அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜிம்பாப்வே வீரர்கள் அனைவரும் விரக்தியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

அதிலும் அணியின் முக்கிய வீரரான சிக்கந்தர் ரசா உருக்கமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: எங்களின் இதயம் சுக்கு நூறாக உடைந்து போயிருக்கிறது.

அதிக வேதனை

அதிக வேதனை

சர்வதேச கிரிக்கெட் வாழ்வு அல்ப ஆயுசில் முடிந்து விட்டதா? கிரிக்கெட் கிட்டை எரித்துவிட வேண்டுமா? அதை நினைக்கும் போது மனது அதிக வேதனை அடைகிறது.

ஜீரணிக்க முடியவில்லை

ஜீரணிக்க முடியவில்லை

எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றார். மற்ற வீரர்களும் வேதனையையும், விரக்தியையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உலக கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் தோல்வி தழுவியது.

தகுதி பெறவில்லை

தகுதி பெறவில்லை

அதனால், 2019 உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது. அந்த வேதனையையும், இப்போது குறிப்பிட்டு உள்ள வீரர்கள், அந்த வேதனையை விட இது கொடுமையானது என்று கூறியுள்ளனர்.

திடீர் ஓய்வு

திடீர் ஓய்வு

முன்னதாக, ஜிம்பாப்வே அணி முக்கிய வீரர் சாலமன் மைர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். யாரும் எதிர்பாரா வண்ணம், திடீரென ஓய்வு முடிவை சாலமன் மைர் எடுத்தது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, July 19, 2019, 22:20 [IST]
Other articles published on Jul 19, 2019
English summary
Are we burn our cricket kits and apply for jobs? says zimbabwe player sikandar raza.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X