இங்கிலாந்து வீராங்கனையுடன் சச்சின் மகன்.. அடிக்கடி பார்ப்பார்கள் போலையே.. ஏன் தெரியுமா?- புகைப்படம்

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையுடன் அர்ஜுன் டெண்டுல்கர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெரும் தொடரில் பங்கேற்றுள்ளது.

நட்சத்திர வீரர்கள் இங்கிலாந்து தெருக்களில் உலா வரும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

 “பொறுமைக்கும் எல்லை உண்டு...” இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ ஆத்திரம்.. அப்படி என்ன செய்தனர்? “பொறுமைக்கும் எல்லை உண்டு...” இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ ஆத்திரம்.. அப்படி என்ன செய்தனர்?

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மட்டும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் இல்லை. சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் தான் தனது நாட்களை கழித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் கடைசி வரை வாய்ப்பே கிடைக்காத அர்ஜுன், இங்கிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ட்ரெண்டிங் புகைப்படம்

ட்ரெண்டிங் புகைப்படம்

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனியல்லே வ்யாட்டுடன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள டேனியெல்லே, உன்னை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நட்பு ரீதியாக பழக்கம்

நட்பு ரீதியாக பழக்கம்

2010ம் ஆண்டு முதலே அர்ஜுன் டெண்டுல்கர் - டேனியெல்லே ஆகியோர் நட்பு ரீதியாக அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள். அர்ஜுன் இங்கிலாந்து சென்றால், டேனியெல்லேவை சந்திக்காமல் செல்லமாட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும் வலைப்பயிற்சியிலும் ஈடுபடுவார்கள்.

கரடுமுரடான ஆண்டு

கரடுமுரடான ஆண்டு

2022ம் ஆண்டில் இதுவரை எந்தவொரு அணிக்காகவும் அர்ஜுன் டெண்டுல்கர் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர், அறிமுகமே ஆகவில்லை. இதன்பின் ரஞ்சிக்கோப்பைக்காக மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Arjun Tendulkar with Danielle Wyatt ( அர்ஜுன் டெண்டுல்கர் - டேனியெல்லே வாட் ) இங்கிலாந்து வீராங்கனையுடன் அர்ஜுன் டெண்டுல்கர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Story first published: Wednesday, June 29, 2022, 15:00 [IST]
Other articles published on Jun 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X