For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதோ வந்துட்டார்ல! ஐபிஎல்-ல் என்ட்ரி கொடுக்கும் சச்சினின் செல்ல மகன் அர்ஜுன்

மும்பை: வரும் பிப்.18ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு, தனது மகன் அர்ஜுனை எப்படியாவது சிறந்த கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கேற்றாற் போல் அர்ஜுனும் தனது சிறுவயது முதல் தந்தை சச்சினிடம் தீவிர கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

என்ன சுந்தர்.. இப்படி பண்ணுறீங்க.. அதிகம் நம்பி ஏமாற்றம் அடைந்த கோலி.. அந்த சம்பவம்தான் சிக்கலே! என்ன சுந்தர்.. இப்படி பண்ணுறீங்க.. அதிகம் நம்பி ஏமாற்றம் அடைந்த கோலி.. அந்த சம்பவம்தான் சிக்கலே!

ஆனால், பேட்ஸ்மேனாக அல்லாமல், வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே அர்ஜுனின் எண்ணமாக இருந்தது. சச்சினும் அதை மோட்டிவேட் பண்ண, இன்று ஐபிஎல் வரை வந்து நிற்கிறார்.

 ஐபிஎல் என்ட்ரி

ஐபிஎல் என்ட்ரி

ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பாக்கப்படுகிற ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஏலப் பட்டியலில் முதல் முதலாக அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் இடம்பெற்றுள்ளது. அவரது அடிப்படை விலைத் தொகை 20 லட்சம்.

 7 வருடம் கழித்து

7 வருடம் கழித்து

ஐபிஎல் மேட்ச் பிக்சிங் தடைக் காலம் முடிந்து 7 வருடங்கள் கழித்து கிரிக்கெட் உலகத்திற்கு திரும்பியிருக்கும் 37 வயதான ஸ்ரீஷாந்த் பெயரும் ஏலத்தில் வரவுள்ளது. அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சம்.

 கேதர் ஜாதவ் கெத்து

கேதர் ஜாதவ் கெத்து

அதேபோல், ரூ.2 கோடி அடிப்படை விலை கொண்ட வீரர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேஸன் ராய், மார்க் வுட், லியாம் பிளங்கட், காலின் இங்ராம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 உலகின் நம்பர்.1 பேட்ஸ்மேன்

உலகின் நம்பர்.1 பேட்ஸ்மேன்

உலகின் தற்போதைய நம்பர்.1 டி20 பேட்ஸ்மேன் டேவிட் மலன் அடிப்படை விலை 1.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அலெக்ஸ் கேரே, டாம் கர்ரன், மிட்சல் ஸ்வெப்சன், நாதன் கோல்டர்-நைல், முஜீப் உர் ரஹ்மான், அலெக்ஸ் ஹேல்ஸ், அடில் ரஷீத், டேவிட் வில்லே உள்ளிட்ட வீரர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

 அடேங்கப்பா

அடேங்கப்பா

2021 ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1097 வீரர்கள் இடம் பெறுகின்றனர். இதில் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கை 207. அதில், சர்வதேச இந்திய வீரர்கள் 21 பேர். சர்வதேச அணியில் இடம்பெறாத வீரர்கள் எண்ணிக்கை 863. அதில் இந்திய வீரர்கள் 743 பேர்.

 53 கோடி இருக்குப்பு

53 கோடி இருக்குப்பு

இந்த ஏலத்தில் அதிக தொகை கைவசம் வைத்திருக்கும் அணி கிங்ஸ் XI பஞ்சாப் தான். 53.20 கோடி பர்ஸில் உள்ளது. ஆர்சிபி (ரூ.35.90 கோடி), ஆர்ஆர் (ரூ.34.85 கோடி), சிஎஸ்கே (ரூ.22.90 கோடி), மும்பை (ரூ.15.35 கோடி), டிசி (ரூ.12.9 கோடி), கேகேஆர் மற்றும் எஸ்ஆர்ஹெச் தலா ரூ.10.75 கோடி மிச்சம் வைத்துள்ளன.

 தாறுமாறு வெஸ்ட் இண்டீஸ்

தாறுமாறு வெஸ்ட் இண்டீஸ்

ஆப்கானிஸ்தான் (30), ஆஸ்திரேலியா (42), பங்களாதேஷ் (5), இங்கிலாந்து (21), அயர்லாந்து (2), நேபாளம் (8), நெதர்லாந்து (1), நியூசிலாந்து ( 29), ஸ்காட்லாந்து (7), தென்னாப்பிரிக்கா (38), இலங்கை (31), ஐக்கிய அரபு அமீரகம் (9), அமெரிக்கா (2), மேற்கிந்திய தீவுகள் (56), ஜிம்பாப்வே (2) என்று அந்தந்த நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Story first published: Saturday, February 6, 2021, 11:46 [IST]
Other articles published on Feb 6, 2021
English summary
Arjun Tendulkar in IPL 2021 Auction - see his base price
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X