For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய ஆட்டத்தில் குல்தீப், வாசிங்டன் சுந்தர் மற்றும் தீபக் ஹூடா என 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி விளையாடியது.

இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை

தடுமாறிய வீரர்கள்

தடுமாறிய வீரர்கள்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. வேகப்பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்ததும், ஹர்திக் பாண்டியா சுழற்பந்துவீச்சை மாற்றினார். இதற்கு நல்ல பலன் கிடைக்க, வாசிங்டன் சுந்தர் ஓவரை எதிர்கொள்ள நியூசி வீரர்கள் தடுமாறினர்.

சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்

சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்

ஃபின் ஆலன் 35 ரன்களும், மார்க் சாம்மேன் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வாசிங்டன் சுந்தர் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கிளன் பிலிப்ஸ் மற்றும் பின் ஆலன் ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 200 ரன்களை நியூசிலாந்து தொடும் என எதிர்பார்த்த நிலையில், குல்தீப் யாதவ் தனது அபார பந்துவீச்சு மூலம் நியூசிலாந்து அணியை திணறடித்தார்.

149 ரன்கள்

149 ரன்கள்

கிளன் பிலிப்ஸ் 17 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுணையில் நெருக்கடி அதிகரிக்க சிஎஸ்கே வீரர் கான்வே 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பிரஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 19 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் மட்டுமே அடித்தது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இதனையடுத்து கடைசி ஓவரை ஆர்ஸ்தீப் சிங் வீசினார். முதல் பந்து நோ பாலாக வீச, டேரல் மிட்செல் சிக்சர் அடித்தார்.இதனையடுத்து அடுத்த 2 பந்திலும் சிக்சர்களும், பவுண்டரியும் பறக்கவிட அந்த ஓவரில் மட்டும் நியூசிலாந்து அணி 27 ரன்களை அடித்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Friday, January 27, 2023, 21:31 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
Arshdeep singh bowling last over made damage for india 19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X