For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Article 370: காஷ்மீரில் மூவர்ணக்கொடி.. அமித் ஷா 2வது வல்லபாய் படேல்..! ஆர்ப்பரித்த விளையாட்டு உலகம்

Recommended Video

Article 370 | Cricketers praises | 370 சட்டப்பிரிவு நீக்கம்!.. ஆர்ப்பரித்த விளையாட்டு உலகம்!-வீடியோ

டெல்லி: 370வது சட்டப்பிரிவை நீக்கிய மத்திய அரசுக்கு, விளையாட்டு உலகம் தரப்பில் இருந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து மற்றொரு தரப்பினரும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார். அதற்கு உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதனையடுத்து, காஷ்மீர் பிரிப்பு மசோதா மீதான காரசார விவாதம் நடை பெற்றது. பிறகு, முதலாவதாக காஷ்மீரில் முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது. பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநில பிரிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

வாக்களிப்பு

வாக்களிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குச் சீட்டு முறையில் ஓட்டுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 61 பேரும் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக, பகுஜன் சமாஜ், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதரவும், காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்தன.

ஆதரவு

ஆதரவு

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தரப்பில் இருந்து பல்வேறு கருத்துகள் எழுந்தது போல, விளையாட்டு உலகத்திலும் எதிர்ப்புகளும், ஆதரவும் பதிவாகின. முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் மத்திய அரசை பாராட்டி இருக்கிறார்.

இந்தியாவுக்கு வாழ்த்து

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: யாரும் செய்ய முடியாததை நாங்கள் காட்டியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் காஷ்மீர் மற்றும் அதன் மூவர்ணத்தையும் ஒழுங்கமைத்துள்ளனர். ஜெய் ஹிந்த்! இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்! இனிய காஷ்மீர்! என்று தெரிவித்து உள்ளார்.

அமைதி அவசியம்

மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னா மத்திய அரசை பாராட்டி உள்ளார். அவர் தமது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 370வது பிரிவை நீக்குவது ஒரு வரலாற்று நடவடிக்கை. இது வரவிருக்கும் காலங்களில் அமைதியானதாகவும் மேலும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்றார்.

வலுவான முன்னேற்றம்

இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் அஞ்சும் சோப்ரா கூறியிருப்பதாவது: 370வது சட்டப்பிரிவு விவகாரத்தில் அரசின் நடவடிக்கை சரியான மற்றும் வலுவான முன்னேற்றமாகும். பள்ளத்தாக்கில் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஆகியவை என்றைக்காவது ஒருநாள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார்.

சர்தார் வல்லபாய் படேல்

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார், அமித் ஷாவை நாட்டின் 2வது சர்தார் வல்லபாய் படேல் என்று வாழ்த்தி இருக்கிறார். அவர் தமது பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி. நாட்டின் ஒற்றுமைக்காக, ஒரே நாடு என்பதை செய்து காட்டிய அரசுக்கு பாராட்டு. அமித் ஷா ஜி நாட்டின் இரண்டாவது சர்தார் படேல் என்று கூறியிருக்கிறார்.

வரலாற்று முடிவு

இந்த வரலாற்று முடிவு குறித்து மல்யுத்த வீரர் கீதா போகாட் ட்விட்டர் மூலம் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார். அவர் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவில் ஒரு வரலாற்று முடிவு. மத்திய அரசின் இந்த வரலாற்று நடவடிக்கைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அமைதி தவழட்டும்

இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் வீரர் முகமது கைப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பல தரப்பட்டுள்ள மக்களை ஒரே தளத்தில் சமமாக நடத்தும். அமைதியும், அன்பும் தவழட்டும் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Tuesday, August 6, 2019, 11:25 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Article 370 gone, sports persons welcoming government decision.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X