For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பத்துல அதிர்ச்சியாதான் இருந்துச்சு... எல்லாமே மாறிடும் வெயிட் பண்ணுவோம்... கமின்ஸ் உறுதி

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான முடிவை தீவிர ஆலோசனைக்கு பிறகு பிசிசிஐ எடுத்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை அடுத்து இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இதில் ஐபிஎல் வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்ப பாடம் கத்துக்கிட்டோம்... திரும்பவும் ரிஸ்க் எடுக்க மாட்டோம்... அடுத்தது யூஏஇயில சந்திப்போம்! இப்ப பாடம் கத்துக்கிட்டோம்... திரும்பவும் ரிஸ்க் எடுக்க மாட்டோம்... அடுத்தது யூஏஇயில சந்திப்போம்!

இந்நிலையில் இந்த அறிவிப்பு ஆரம்பத்தில் தங்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை கொடுத்தது என்று ஆஸ்திரேலியா மற்றும் கேகேஆர் பௌலர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு

ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு

ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அணிகளின் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த முடிவை அவசர ஆலோசனைக்கு பிறகு பிசிசிஐ இன்றைய தினம் அறிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.

பிசிசிஐயின் முக்கிய பிரச்சினை

பிசிசிஐயின் முக்கிய பிரச்சினை

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புவது பிசிசிஐக்கு அடுத்த தலைவலியாக அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்களுக்கு வரும் 15ம் தேதிவரை தடைவிதித்து அந்நாட்டு பிரதமர் மோரிசன் முன்னதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு

அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு

இந்தியாவில் இருந்து திரும்ப முயன்றால் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோரீசனின் இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கு முதலில் அதிர்ச்சியை கொடுத்ததாக ஆஸ்திரேலிய மற்றும் கேகேஆர் ணியின் பௌலர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

கமின்ஸ் நம்பிக்கை

கமின்ஸ் நம்பிக்கை

ஆயினும் ஜூன் மாத துவக்கம் வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தாங்கள் மற்றவை குறித்து யோசிக்கவிலை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். வரும் 15ம் தேதிக்கு பிறகு மீண்டும் பயணிகள் விமானங்கள் இந்தியாவில் இருந்து அனுமதிக்கப்படும் என்றும் தாங்கள் அதையடுத்து நாடு திரும்புவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையை ஏற்படுத்திய ஒப்பந்தம்

நம்பிக்கையை ஏற்படுத்திய ஒப்பந்தம்

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருவதற்கு முன்னதாக 14 நாட்கள் குவாரன்டைனுக்கு பிறகே நாட்டிற்குள் வருவோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு வந்ததாகவும், அதுவும் தாங்கள் நாடு திரும்புவதற்கான நம்பிக்கையை அளித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்,

Story first published: Tuesday, May 4, 2021, 19:34 [IST]
Other articles published on May 4, 2021
English summary
After Australian PM announced the travel ban few aussies were anxious - Pat Cummins
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X