For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து இமாலய தோல்வி.. ஓட ஓட விரட்டிய ஸ்மித்.. சுத்த விட்டு அடித்த 2 பவுலர்கள்!

பிர்மிங்காம் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே ஆன ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் ஆதிக்கம் செலுத்தினாலும், இரண்டாவது இன்னிங்க்ஸில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் கோட்டை விட்டு படு தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். அதிலும் முதல் இன்னிங்க்ஸில் அவர் அடித்த சதம் டெஸ்ட் போட்டியின் சிறந்த சதங்களுள் ஒன்று.

அதிர்ச்சி துவக்கம்

அதிர்ச்சி துவக்கம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கில் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது ஆஸ்திரேலியா. 35 ரன்களுக்கு வார்னர் உட்பட முதல் மூன்று பேட்ஸ்மேன்களை இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே பொறுப்பாக ஆடி வந்தார்.

ஸ்மித் அபார ஆட்டம்

ஸ்மித் அபார ஆட்டம்

ட்ராவிஸ் ஹெட் 35 ரன்கள் எடுத்தார். 122 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தது ஆஸ்திரேலியா. எப்படியும் 150 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி இரு வீரர்களான பீடர் சிடில் மற்றும் நாதன் லியோனை மறுபுறம் நிற்க வைத்துக் கொண்டு 144 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் எடுத்தது.

ஆண்டர்சன் காயம்

ஆண்டர்சன் காயம்

இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ஓவர்கள் வீசிய நிலையில் காயமடைந்தார். அது இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இங்கிலாந்து ரன் குவிப்பு

இங்கிலாந்து ரன் குவிப்பு

அடுத்து இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் பர்ன்ஸ் 133 ரன்கள் குவித்து அசத்தினார். ஜோ ரூட் 57, பென் ஸ்டோக்ஸ் 50, கிறிஸ் வோக்ஸ் 37* ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணி 374 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா பின்னடைவு

ஆஸ்திரேலியா பின்னடைவு

ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் 3, நாதன் லியோன் 3, பீட்டர் சிடில் 2, பாட்டின்சன் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்து அணியின் சில கூட்டணிகளை பிரிக்க முடியாமல் போனதால் அந்த அணி ரன் குவித்தது. ஆஸ்திரேலியா 90 ரன்கள் பின்னடைவுடன் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது.

சுதாரித்த ஆஸ்திரேலியா

சுதாரித்த ஆஸ்திரேலியா

முதல் இன்னிங்க்ஸ் போலவே இந்த முறையும் துவக்க வீரர்கள் பான்கிராப்ட் 7, வார்னர் 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். அதன் பின் சுதாரித்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய அளவில் ரன் குவித்தனர். உஸ்மான் கவாஜா 40, ஸ்டீவ் ஸ்மித் 142, ட்ராவிஸ் ஹெட் 51, மாத்யூ வேட் 110, டிம் பெய்ன் 34, பாட்டின்சன் 47 ரன்கள் எடுத்தனர்.

இரண்டு சதம் அடித்த ஸ்மித்

இரண்டு சதம் அடித்த ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித் ஒரே போட்டியில் இரண்டு சதம் அடித்து ஆஷஸ் தொடரில் சாதனை படைத்தார். ஆஸ்திரேலிய அணி 487 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது. அதிலும் ஆஸ்திரேலியா ஓவருக்கு 4.34 ரன்கள் எடுத்து மிரட்டியது.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 398 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. கடைசி ஒரு நாள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்ட முடியாவிட்டாலும் டிரா செய்ய முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் இரண்டு பந்துவீச்சாளர்கள் போட்டியை மாற்றினர்.

சரிந்த விக்கெட்கள்

சரிந்த விக்கெட்கள்

கம்மின்ஸ் வேகம், நாதன் லியோன் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கம்மின்ஸ் 4 விக்கெட்களும், லியோன் 6 விக்கெட்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 37 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும்.

இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து தோல்வி

ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்க்ஸிலும் சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகன் விருது வென்றார். இங்கிலாந்து தன் சொந்த மண்ணில் முதல் ஆஷஸ் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Tuesday, August 6, 2019, 10:05 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Ashes 2019 1st Test match result and report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X