For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பென் ஸ்டோக்ஸ் வேற லெவல்.. இங்கிலாந்து வெற்றியை வரலாறு பேசும்.. ஆஸி.வை அவமானப்படுத்தி பழி தீர்த்தது!

Recommended Video

பென் ஸ்டோக்ஸ் மரண அடி.. இங்கிலாந்து வெற்றியை வரலாறு பேசும்- வீடியோ

லீட்ஸ் : ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி யாரும் நினைத்துப் பார்க்காத வெற்றியை எட்டி வரலாற்றில் தன் பெயரை பொறித்தது.

முதல் இன்னிங்க்ஸில் வெறும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்த இங்கிலாந்து அணி, அதற்கு சேர்த்து வைத்து 359 ரன்கள் இலக்கை எட்டி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பென் ஸ்டோக்ஸ் அபாரம்

பென் ஸ்டோக்ஸ் அபாரம்

எட்ட முடியாத இலக்கை எட்டிக் காட்டினார் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணி தோல்வியின் விளிம்பில் நின்ற போது சுமார் 100 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அதை செயல்படுத்திக் காட்டியது பென் ஸ்டோக்ஸ் தான்.

தொடர் வெற்றி நிலை

தொடர் வெற்றி நிலை

ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 1 - 0 என முன்னிலையில் இருந்தது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே இருப்பதால் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ்

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் 61, லாபுஷேன் 74 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து சறுக்கல்

இங்கிலாந்து சறுக்கல்

மோசமான அதே ஆடுகளத்தில் அடுத்து ஆடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அளவுக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உலகமே கை கொட்டி சிரித்தது. இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வாய்க்கு வந்தபடி இங்கிலாந்து வீரர்களை திட்டினர்.

ஆஸி. இரண்டாம் இன்னிங்க்ஸ்

ஆஸி. இரண்டாம் இன்னிங்க்ஸ்

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 246 ரன்கள் எடுத்தது. லாபுஷேன் இந்த முறை 80 ரன்கள் எடுத்தார். வேட் 35, ஹெட் 25, கவாஜா 23, பாட்டின்சன் 20 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணிக்கு 359 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து போராட்டம்

இங்கிலாந்து போராட்டம்

டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்க்ஸில் 359 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது எந்த அணிக்கும் பகல் கனவு தான். விரல் விட்டு எண்ணும் அளவுக்கே அப்படி ஒரு சேஸிங் நடந்துள்ளது. மேலும், இங்கிலாந்து அணி இதுவரை இத்தனை பெரிய சேஸிங்கை டெஸ்ட் போட்டியில் செய்ததே இல்லை. இருந்தாலும் அந்த அணி போராடியது.

பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை

பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை

கேப்டன் ஜோ ரூட் 77, டென்லி 50 ரன்கள் சேர்த்தாலும் மற்ற வீரர்கள் சொதப்பினர். இங்கிலாந்து 261 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்தார். அடுத்து 286 ரன்களுக்கு 9 விக்கெட்கள் பறிபோனது.

வெறியாட்டம் ஆடிய ஸ்டோக்ஸ்

வெறியாட்டம் ஆடிய ஸ்டோக்ஸ்

10வது விக்கெட்டுக்கு லீச் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் வெறியாட்டம் ஆடினார். லீச்சை முடிந்த வரை பேட்டிங்கே செய்ய விடாமல் பார்த்துக் கொண்ட ஸ்டோக்ஸ் சிக்ஸ் அடிக்கவே முயற்சி செய்தார். 8 சிக்ஸர்கள் விளாசிய ஸ்டோக்ஸ் 135 ரன்கள் சேர்த்து கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.

வரலாற்று வெற்றி

வரலாற்று வெற்றி

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்க்ஸில் அதிக ரன்கள் அடித்து சேஸ் செய்துள்ளது. 359 ரன்கள் வெற்றி இலக்கை இதுவரை இங்கிலாந்து அணி எட்டியதே இல்லை. அதை சாதித்துக் காட்டி உள்ளது. அதற்கும் முழு காரணம் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே.

தொடர் சமன்

தொடர் சமன்

முதல் இன்னிங்க்ஸில் 67 ரன்களுக்கு தங்களை சுருட்டிய ஆஸ்திரேலிய அணியை அதே போட்டியில் வீழ்த்தி பழி தீர்த்தது இங்கிலாந்து. இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் 1 - 1 என மூன்று போட்டிகள் முடிவில் சம நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால் இரு அணிகளுக்கும் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, August 25, 2019, 22:04 [IST]
Other articles published on Aug 25, 2019
English summary
Ashes 2019 : Australia vs England 3rd test result and Ben Stokes century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X